டிமென்ஷியா நோயாளிகளுக்கு உகந்த முதல் குடியிருப்பு

டிமென்ஷியா நோயாளிகளுக்கு உகந்த முதல் குடியிருப்பு

2 mins read
8e1347cf-7793-4793-b853-93af4c6af8c3
சிவப்பு பொத்தான் பொருத்தப்பட்டுள்ள திருவாட்டி சுவா இம்மின் இல்லத்தைத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (வலது) பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டிமென்­ஷியா எனும் மூத்தோர் ஞாபகமறதி நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உகந்த சேவை­க­ளைக் கொண்ட முதல் குடியிருப்பாக உருவாகவுள்ளது இயோ சூ காங் வட்­டா­ரம்.

அவ்­வட்­டா­ரத்­தில் 40 விழு­க்காட்­டுக்கு மேற்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் 65 வயது மேற்­பட்ட மூத்­தோர்.

இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்­பி­னர் யிப் ஹொன் வெங், அந்த தொகுதி வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் முழு­மை­யாக டிமென்­ஷியா நோயா­ளி­

க­ளுக்கு உகந்த வட்­டா­ர­மாக மாறி­வி­டும் என்று கூறி­னார்.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் வய­து அடிப்­ப­டை­யி­லும் அங்­குள்ள வசதி

­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் அந்தத் தொகுதி மூத்தோருக்கான ஒரு வட்டாரமாகத் திகழ்கிறது என்று திரு யிப் கூறி­னார்.

அங்­குள்ள வச­தி­களும் கட்­ட­மைப்­பும் மூத்­தோ­ருக்கு உகந்­த­தாக அமைய வேண்­டும் என்று திரு யிப் வலி­யு­றுத்­தி­னார்.

அவ்­வட்­டா­ரத்­தில் நேற்று அறி­விக்­கப்­பட்ட புதிய திட்­டங்­களில் ஒன்று குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கான தனிப்­பட்ட எச்­ச­ரிக்கை பொத்­தான்.

தற்­போது அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள புளோக் 626, புளோக் 641 ஆகி­ய­வற்­றில் கிட்­டத்­தட்ட 80 மூத்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இத்­திட்­டம் உத­வு­கிறது.

இந்­தத் திட்­டம் மூலம் உதவி தேவைப்­படும் மூத்­தோர் தங்­கள் வீட்­டில் பொருத்­தப்­பட்­டுள்ள சிவப்பு பொத்­தானை அழுத்­தி­னால் அரு­கில் உள்ள டிஎச்கே மூத்­தோர் நட­வ­டிக்கை நிலை­யத்­தி­லி­ருந்தோ கேர்­லைன் உதவி எண்­ணி­ல் இருந்தோ ஊழி­யர் ஒரு­வர் தொலை­பேசி வழி அழைத்து முதி­ய­வ­ரு­டன் பேசு­வார்.

சாங்கி பொது மருத்­து­வ­மனை கேர்­லைன் உதவி எண்ணை நிர்­வ­கிக்­கிறது.

இந்தச் சேவை பெற்ற முதியவர் ஒருவரை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சென்று பார்வையிட்டார்.

இயோ சூ காங் வட்டாரத்திற்கு நேற்று அமைச்­சர்­நிலை வருகை அளித்த துணைப் பிர­த­மர் அங்கு பல குடி­யி­ருப்­பா­ளர்­க­ளைச் சந்­தித்து அள­வ­ளா­வி­னார்.

கொவிட்-19 கார­ண­மா­க­க் கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இதுபோன்ற அமைச்­சர்­நிலை வரு­கை­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டன. இனிமேல் 4ஜி தலைவர்கள் இந்த அமைச்சர்நிலை வருகையைத் தொடர்வார்கள் என்று திரு லாரன்ஸ் வோங் கூறினார்.