தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூர் தொழில்துறைக்குப் பெயர்போனது. அங்கே சிவன்கூடல் எனும் கிராமத்தில் நெல் வயல்களுக்கு மத்தியில் ஒரு சிவன் ஆலயம் உள்ளது. கிட்டத்தட்ட 900 ஆண்டு
களுக்கு முன்பாக ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது அந்த சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்.
ஆலயத்தில் சிவலிங்கம் இருந்தாலும் அந்த கிராம மக்கள் கடந்த பல்லாண்டுகளாக அந்தச் சிவலிங்கத்திடம் செய்யும் பிரார்த்தனை ஒன்றுதான். தங்கள் ஆலயத்திலிருந்து திருடப்பட்ட சோமாஸ்கந்தர் வெண்கலச் சிலைகள் திரும்பி வந்துவிடாதா என்பதுதான் அது.
சிவன், பார்வதி, அவர்களது புதல்வன் ஸ்கந்தனுடன் (முருகன்) வீற்றிருக்கும் மூன்று வெண்கலச் சிலைகளே திருடப்பட சிலைகள்.
கிட்டத்தட்ட 54 சென்டிமீட்டர் உயரத்தில் கிளிமூக்குகளுடன் அழகாக வடிக்கப்பட்ட அந்தச் சிலைகள் ஒன்பதாம் நுற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தென் இந்தியா, இலங்கை, கம்போடியா, இந்தோனீசியா போன்ற தென் கிழக்கு ஆசிய வட்டாரத்தையும் ஆண்ட சோழப் பரம்பரையில் நிலவிய சிற்ப வேலைகளைப் பிரதி
பலிக்கின்றன.
ஒரு கட்டத்தில் எங்கு இருக்கின்றன என்றே தெரியாமல் சிவன்கூடல் மக்கள் இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு சிலை ஆர்வலர்கள், தமிழ்நாடு காவல் துறையின் சிலை திருட்டுப் பிரிவு ஆகியவற்றின் விசாரணையின் உதவியுடன் சிலைகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவை சிங்கப்பூரின் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில்தான் உள்ளன என்பது தெரியவந்தது.
சிங்கப்பூரில் வசிக்கும் தொல்பொருள் ஆர்வலர் திரு விஜய் குமார், சோமாஸ்கந்தர் சிலைகள் தமிழ்நாட்டின் சிவன்கூடலில் உள்ள ஆலயத்திலிருந்து திருடப்பட்டவை என்பதைக் கண்டுபிடித்தார். 1916ல் வெளியான புத்தகம் ஒன்றில் இருந்த புகைப்படத்தை திரு விஜய் குமார் ஒப்பிட்டுப் பார்த்தபோது உண்மை வெளிப்பட்டது.
சிலைகள் தங்களிடம்தான் உள்ளன என்பதை ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்.
சிலைகளைத் திரும்ப தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கு இந்தியாவும் சிங்கப்பூரும் கடந்த ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றன. அதுவரை சோமாஸ்கந்தர் மீண்டும் தங்கள் ஊருக்கு வரும் நாளுக்காக சிவன்கூடலின்
கிட்டத்தட 120 குடும்பங்கள் காத்திருக்கின்றன.

