மனநலம் தொடர்பான விழிப்புணர்வு விழா

பொன்­மணி உத­ய­கு­மார்

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த 15,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் மற்­றும் ஊழி­யர்­க­ளுக்­காக இம்மாதம் 20, 21ஆம் தேதிகளில் மன­நல நல்­வாழ்வு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட நிகழ்ச்­சி­கள் மற்­றும் திட்ட நிர்­வா­கத் துறை­யில் பயி­லும் ஐவர் இணைந்து ஏற்­பாடு செய்த இந்த நிகழ்­வில், மன­ந­லம் தொடர்­பான தக­வல்­க­ளைக் கொண்ட ஐந்து சாவ­டி­களும் விளை­யாட்டு நட­வ­டிக்­கை­கள் கொண்ட ஐந்து சாவ­டி­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

மன­ந­லம் தொடர்­பான முக்­கி­யத் தக­வல்­களை எளி­மை­யாக, மாண­வர் மனத்தில் நிலைக்­கும் வகை­யில் கொண்டு சேர்க்­கும் ஒரு நிகழ்­வுக்­குத் தாங்­கள் ஏற்­பாடு செய்­தி­ருப்­ப­தாக ஏற்­பாட்­டுக் குழு­வில் உள்ள தாரணி நாக­ரா­ஜன், 21 மற்­றும் முஹம்­மது அர­ஃபாட், 20, கூறி­னர்.

தன்­னு­டைய உற­வி­னர்­க­ளி­டையே மன­ந­லப் பிரச்­சினை ஏற்­பட்­ட­தை­யும் மக்­க­ளி­டையே மன­ந­லம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு குறைந்­தி­ருந்­த­தை­யும் உணர்ந்த ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் அர­ஃபாட், இந்­தத் தலைப்­பில் தனக்கு ஆர்­வம் ஏற்­பட்­ட­தா­கக் கூறி­னார். மன­ந­லம் குறித்த தவ­றான எண்­ணங்­கள் பர­வி­யுள்ள நிலை மாற வேண்­டும் என்­பது இவ­ரது விருப்­ப­மா­கும்.

"மன­ந­லம் பாதிப்­ப­டை­வது அனை­வ­ரும் சந்­திக்­கக்­கூ­டிய ஒரு சிக்­கல். உடனே ஒரு­வரை மன­ந­லம் சரி­யில்­லா­த­வர் என்று கரு­து­வ­தும் அதைப் பற்றி பேசத் தயங்­கு­வ­தும் மாற வேண்­டும்," என்­கி­றார் அர­ஃபாட்.

மன­ந­லம் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த முதன்­மு­றை­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்தத்­திரு­விழா, ஆண்­டு­தோ­றும் தொடர்ந்து நடை­பெ­ற­வேண்­டும் என்­பது இவ­ரது விருப்பம்.

மாண­வர்­க­ளுக்­கென பள்­ளி­களில் இருக்­கும் ஆத­ர­வுத் தளங்­களை நாடு­மாறு மாண­வர்­களை அரஃபாட் ஊக்குவிக்கிறார்.

"பய­மின்றி பள்ளி ஆலோ­ச­கர்­களை அணு­கும்­போ­து­தான் தங்­க­ளுக்­குக் கிடைக்­கக்­கூ­டிய ஆத­ர­வைப் பற்றி மாண­வர்­கள் அறிந்­து­கொள்ள முடி­யும். அத­னால் தயக்­கம் வேண்­டாம்," என்­றார் இவர்.

"உதவி நாடு­வ­தற்கு முன்பு தனக்கு ஆத­ரவு தேவை என்று ஏற்­றுக்­கொள்­வது அவ­சி­யம். அதோடு, தாங்­கள் எதிர்கொள்ளும் சிக்கல்களிலிருந்து மீண்டு வர முடி­யும் என்று ஒரு­வர் தன் மீது நம்­பிக்கை கொள்ள வேண்­டும்," என்­று கூறி­னார் தாரணி.

தாரணி இளம் வய­தில் தான் எதிர்­நோக்­கிய சவால்­க­ளால் மன­நலம் குறித்து படித்து அறிந்து கொண்­ட­வர். பெற்­றோர் ஆத­ரவை அப்­போது அவர் நாடி­ய­போ­தும் ஆரம்­பத்­தில் தார­ணி­யின் நிலை­மையை அவர்­கள் புரிந்­து­கொள்­ள­வில்லை. காலப்­போக்­கில் தார­ணிக்­குத் தேவை­யான ஆத­ரவை வழங்­கி­னார்­கள். ஒவ்­வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு அன்­றைய தினத்­தைப் பற்றி பெற்­றோ­ரு­டன் பேசி­யது தனக்கு உத­வி­யாக அமைந்­த­தாக தாரணி பகிர்ந்­து­கொண்­டார்.

"முன்­பைக் காட்­டி­லும் பிள்­ளை­களுக்கு ஆத­ரவு வழங்­கத் தயா­ராக இருக்­கும் பெற்­றோர்­கள் அதி­க­ரித்­துள்­ள­னர். இது நல்­ல­தொரு மாற்­றம். பெற்­றோர்­தான் பிள்­ளை­களுக்கு முதற்கட்ட உதவி வழங்­கும் நிலை­யில் உள்­ள­னர்," என்­றார் தாரணி.

நண்­பர்­கள் மத்­தி­யில் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உத­வு­தையும் இவர் முக்கியமாகக் கரு­து­கி­றார். இளை­யர்­கள் தங்­க­ளின் சமூக ஊட­கப் பக்­கத்­தில் மன­ந­லம் தொடர்­பான ஆத­ரவு குறித்து பகிர்ந்­து­கொள்­வதும் சிறப்பு என்­கி­றார் தாரணி.

uponmani@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!