தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு உதவ, தெமாசெக் அறநிறுவனம் மூன்று ஆதரவு திட்டங்களின்கீழ் $3.7 மில்லியன் நிதியளிக்கும். இதற்கு முன், தெமாசெக் அறநிறுவனம் கொவிட்-19 தொற்றுநோய் பரவலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு $3.2 மில்லியன் உறுதியளித்துள்ளது.
இந்த மானியம் மாதாந்திர நிதி உதவித் திட்டத்தின்கீழ் 2,440 மாணவர்களுக்கு உதவும். கூடுதல் நிதி உதவித் திட்டத்தின்கீழ் 1,875 மாணவர்கள் வரைக்கும் உதவ $562,500 ஒதுக்கப்படும்.
சிறப்பு மாணவர் உதவித் திட்டத்தின் கீழ் கிட்டதட்ட 2,020 மாணவர்களுக்கும், மேலும் 500 மாணவர்களுக்கும் அவர்களின் மடி கணினிச் செலவுகளுக்கு உதவும்.
இந்த மானியம் மாணவர்களை முன்னேற ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.


