சிங்கப்பூர் நீர்ப்பகுதிகளில் தென்படும் கடற்பசுக்கள்

சிங்கப்பூர் நீர்ப்பகுதிகளில் தென்படும் கடற்பசுக்கள்

1 mins read
5907e6e7-110d-407c-b3de-692cc19623f2
கடந்த 25 ஆண்டுகளில் கடற்பசு தென்பட்ட 48 சம்பவங்களில் 31 ஜோகூர் நீரிணையின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சாவ் பாவ் கோப்புப் படம் -

உபின், தெக்கோங் நீர்ப்பகுதிகளில் கடல் புல்வெளிகள் இருப்பதை உறுதிசெய்து அந்தப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அரசிதழில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் குரல் கொடுக்கின்றனர்.

ஜோகூர் நீரிணையின் கிழக்குக் கோடியில் உள்ள இந்த நீர்ப் பகுதிகளில் மிகவும் அருகிவரும் விலங்கினமான டுகோங் எனும் கடற் பசுக்கள் அதிகம் தென்படுகின்றன.

கடந்த சுமார் 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கடற்பசுக்கள் தென்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் கடற்பசு தென்பட்ட 48 சம்பவங்களில் 31, ஜோகூர் நீரிணையின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றன என்று என்யுஎஸ் அறிவிலாளர்கள் தெரிவித்தனர். நில மீட்பு, கடல் பகுதிகளில் அதிகமான மனித நடமாட்டம் போன்றவற்றால் தென்கிழக்காசியாவில் கடற்பசுக்களின் எண்ணிக்கையைக் குறைந்துள்ளது. வட்டார அளவில், சிங்கப்பூரில்தான் அதிக அளவில் கடலோர வாழ்விடம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க இன்னும் அதிகம் செய்யப்பட்ட வேண்டும் என்கின்றனர்.