செய்திக்கொத்து

சீனத் துணைப் பிரதமர் ஹான் ஸெங் சிங்கப்பூர் வருகை

சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டுடன் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சீனத் துணைப் பிரதமர் ஹான் ஸெங் இன்று சிங்கப்பூர் வருகிறார். இரு துணைப் பிரதமர்களும் 18வது இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றத்தின் உயர்மட்ட கூட்டத் தின் இணைத் தலைவர்களாகச் செயல்படுவர். இரு நாடு களுக்கிடையே உள்ள தற்போதைய ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்யவும் எதிர்கால ஒத்துழைப்பு அம்சங் களை வரையவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு நேரடியாக நடைபெறும் முதலாவது கூட்டம் இது. கடந்த இரு கூட்டங்களும் மெய்நிகர் வழியாக நடத்தப்பட்டன. பெருந்தொற்று தொடங்கிய பிறகு, சிங்கப்பூருக்கு வருகை தரும் சீனாவின் ஆக உயரிய தலைவர் திரு ஹான் ஸெங் என்பது குறிப்பிடத்தக்கது. திரு ஹெங், திரு ஹானுடன் இருதரப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதோடு, அவருக்கு இரவு விருந்தளிப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித் தது. திரு ஹானின் இரண்டு நாள் பயணத்தின்போது அவர், அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார். பின்னர் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சு நடத்துவார்.

'செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தண்டனை வழங்க வாய்ப்பில்லை'

சிங்கப்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் எதிர்காலத் தில் தண்டனை விதிப்பின்போது செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பெரும்பாலும் பயன்படுத்தாது என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்து உள்ளார். செயற்கை நுண்ணறிவு அம்சத்தைப் பயன்படுத்து வது சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்று திரு மேனன் நேற்று இணையம் வழி நடைபெற்ற தண்டனை விதிப்பு மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தியபோது கூறினார்.

அரசு நீதிமன்றங்களும் சிங்கப்பூர் சட்டக் கழகமும் ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் மாநாட்டில் தண்டனை விதிப்புக் கொள்கைகள், கட்டமைப்புகள், குற்றவியல் நீதித் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், இளையர், மனநல நோயாளிகள் போன்ற குறிப்பிட்ட சில வகை குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் கொள்ளக்கூடிய அம்சங்கள் போன்ற விவகாரங்கள் அலசி ஆராயப்படும்.

"குற்றவியல் வழக்குகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்துவது குறித்து மிகக் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். நாம் இப்போதைக்கு அதைப் பயன்படுத்துவதாக இல்லை," என்றும் திரு மேனன் விவரித்தார்.

'டிரைப்கார்' கார் பகிர்வு நிறுவனம் மேலும் 400 கார்களைப் பெற்றுள்ளது

கார் பகிர்வு நிறுவனமான 'டிரைப்கார்' மேலும் 400 கார் களைத் தனது கார் தொகுதியில் சேர்த்துள்ளது. அதையும் சேர்த்து இப்போது அதனிடம் 1,300 கார்கள் உள்ளன. உள்ளூர் கார் பகிர்வு நிறுவனமான 'பாப்புலர் ரெண்ட் எ கார்' நிறுவனத்தின் உரிமையை, 'டிரைப்கார்' நிறுவனம் தனது வசமாக்கிக்கொண்டதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள், கார் பகிர்வுத் திட்டத்துக்கும் பெருநிறுவனத்தின் நீண்டகால கார் வாடகைத் திட்டத் துக்கும் பயன்படுத்தப்படும். 'பாப்புலர் ரெண்ட் எ கார்' நிறுவனத்தின் வாகனங்கள் செல்லக்கூடிய இடங்களும் 'டிரைப்கார்' நிறுவனத்தின் வாகனங்கள் செல்லக்கூடிய இடங்களும் ஒருங்கிணைக்கப்படும் என்று 'டிரைப்கார்' நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

டியோ: இணையப் பாதுகாப்பு மசோதா அபாயங்களை முதலில் போக்கும்

இணைய அபாயங்களைத் தடுக்கும் சட்டங்கள் ஆக அவசரமான விவகாரங்களுக்கு முதலில் தீர்வு கண்டு, பின்னர் குறிப்பிட்ட சில அக்கறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இணையப் பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கு தல் தொடர்பான கலந்துரையாடலின் பேச்சாளர்கள் கூறினர். அந்நிகழ்ச்சியில் தொடக்க உரை நிகழ்த்திய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, இம்மாதம் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் உத்தேச இணையப் பாதுகாப்பு மசோதா அபாயங்களுக்கேற்ப செயல்படுத்தப் படும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!