குறிப்பிட்ட வழங்கீடுகளை வழங்கவும் பெறவும் மின்னிலக்க சிங்கப்பூர் நாணயத்தை தனிநபர்கள், வர்த்தகங்கள், அரசாங்கம் பயன்
படுத்துவது தொடர்பாக இவ்வாண்டு நான்கு முன்னோட்டத் திட்டங்கள் இடம்பெற இருக்
கின்றன.
இந்த அறிமுகத் திட்டங்களுக்கு டிபிஎஸ் வங்கி, கிராப், ஓசிபிசி வங்கி, யுஓபி வங்கி ஆகியவற்றுடன் அரசாங்க அமைப்புகளும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் தலைமை தாங்குகின்றன.
நோக்கம் சார்ந்த நாணய வடிவ அணுகுமுறையை மையமாகக் கொண்டு இந்த முன்னோட்டத் திட்டங்கள் இடம்பெறுகின்றன.
அதன்படி, செல்லுபடியாகும் காலம், எத்தகைய கடைகளில் வழங்கீடுகளைப் பயன்படுத்தலாம் போன்ற நிபுந்தனைகளைத் தெளிவாகக் குறிப்பிடலாம்.
உதாரணத்துக்கு, அரசாங்கம் வழங்கும் பற்றுச்சீட்டுகளை மீட்கக்கூடிய மின்னிலக்க நாணயத்தின் பயன்பாட்டை டிபிஎஸ் வங்கியும் அரசாங்கத் தொழில்நுட்ப முகவையின் பொது அரசுப் பொருள்கள் பிரிவும் சோதனையிடும்.
முன்னோட்டத் திட்டத்தில் பங்கேற்பர் RedeemSG எனும் பற்றுச்சீட்டைப் பயன்படுத்துவர். அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தில் சில உணவு மற்றும் பானக் கடைகள் ஈடுபடுகின்றன. இந்தக் கடைகளிலிருந்து உணவு மற்றும் பானங்களை வாங்க அரசாங்கம் வழங்கும் பற்றுச்சீட்டுகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அதுகுறித்து அரசாங்கம்
தெரிந்துகொள்ள RedeemSG
பற்றுச்சீட்டு முறை உருவாக்கப்
பட்டுள்ளது. இன்னொரு திட்டத்தில் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்குடனும் நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ஃபாஸ் ஃபைனான்ஷியலுடனும் கிராப் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. இன்றும் நாளையும் நடை
பெறும் சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப நிறுவன விழாவில் வர்த்தக மின்னிலக்கப் பற்றுச்
சீட்டுகளாக நோக்கம் சார்ந்த நாணம் வழங்கப்படுவதை அவை கண்காணிக்கும்.
தற்போதைய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டு முறையை மேம்படுத்த நோக்கம் சார்ந்த நாணயத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக யுஓபி வங்கியும் ஸ்கில்ஃபியூச்சர் சிங்கப்பூரும் சோதனையிடும்.
வங்கிக் கணக்கு இல்லாது அரசாங்க வழங்கீடுகளைப் பெற நோக்கம் சார்ந்த நாணயத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக ஓசிபிசி வங்கியும் மத்திய சேமநிதிக் கழகமும் சோதனையிடும்.

