வசதி குறைந்த ஐடிஇ மாணவர்களுக்கு மானியம்

வசதி குறைந்த தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் $3.7 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான புதிய மானி­யம் ஒன்றை தெமாசெக் அறநிறவனம் வழங்­கு­கிறது. அதி­க­ரித்து வரும் விலை­வா­சி­யைச் சமா­ளிக்க மாண­வர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் வண்­ணம் இந்த மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

வழங்­கப்­படும் மானி­யத்­தொகை தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­க­ளுக்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் மூன்று ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாண­வர்­க­ளுக்­காக தெமா­செக் அற­நி­று­வ­னம் ஏற்­கெ­னவே இவ்­வாண்டு $3.2 மில்­லி­யன் தரு­கிறது. கிட்­டத்­தட்ட 2,440 மாண­வர்­க­ளுக்கு உத­வும் மாதாந்­திர நிதி உத­வித் திட்­டத்தை மானி­யம் ஆத­ரிக்­கும். அது­மட்­டு­மல்­லாது, கூடு­தல் நிதி உத­வித் திட்­டம் மூலம் ஏறத்­தாழ 1,875 மாண­வர்­

க­ளுக்கு $562,500 நிதி ஒதுக்­கப்­படும். சிறப்பு மாண­வர் உத­வித் திட்­டத்­தின்­கீழ் கிட்­டத்­தட்ட 2,020 மாண­வர்­க­ளுக்­கும் உதவி கிடைக்­கும். 500 மாண­வர்­க­ளுக்­கான மடிக்­க­ணினி செல­வு­கள் ஈடு­செய்­யப்­படும்.

இந்த மானி­யத்­தால் பல­ன­டை­யும் மாண­வர்­களில் 20 வயது திரு அல் ஃபியான் அல் லாமி­னும் ஒரு­வர். தமது குடும்பத்தின் நிதி நெருக்­க­டி­யைக் கருத்­தில் கொண்டு பொது­வாக அவர் பள்ளி இடை­வே­ளை­யின்­போது சாப்­பி­டு­வ­தில்லை. வெறும் தண்­ணீர் அருந்தி பசி­யைப் போக்­கிக்­கொண்­டார்.

புதிய மானி­யம் மூலம் அவ­ரால் இனி பள்ளி இடை­வே­ளை­யின்­போது உண­வ­ருந்­த­லாம். போக்­கு­வ­ரத்­துச் செல­வு­கள் பற்­றி­யும் அவர் கவ­லைப்­ப­டத் தேவை­இல்லை.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் வான்­வெளி விமா­ன­ மிண்ணனுவியல் துறை­யில் பயின்று வரும் 17 வயது ஃபிலிப் டி கிரெட்­ச­ர் இந்த மானியத் திலிருந்து நிதி உதவி பெறும் மற்றொரு மாணவர். நிதி­யு­தவி கிடைப்­ப­தால் வார­யி­று­தி­களில் வேலை செய்து பணம் சம்­பா­திக்க வேண்­டிய கட்­டா­யம் இனி அவ­ருக்கு இருக்­காது.

தமக்­குக் கிடைக்­கும் நிதி­

உ­தவி பாது­காப்பு உணர்வை அளிப்­ப­தாக திரு டி கிரெட்­சர் கூறி­னார்.

"தொடர்ந்து முன்­னேற

ஆத­ரவு இருக்­கிறது என்ற உணர்­வை­யும் ஊக்­கு­விப்­பை­யும் இம்­மா­தி­ரி­யான திட்­டங்­கள் தரு­கின்­றன," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!