தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'அனைவரையும் முன்னேற்றும் வாழ்நாள் கற்றல் அவசியம்'

2 mins read
29b77fde-cde8-4b9b-89e5-2b1c81bb542f
வாழ்நாள் கற்றல் முறை தனிநபர், நிறுவனங்களின் நோக்கங்களை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாதங்கி இளங்கோவன்

வாழ்நாள் கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல சமுதாயங்களுள் சிங்கப்பூரும் ஒன்று என்றாலும், இக்கொள்கையை முழுமையாக அடைவதிலிருந்து சிங்கப்பூர் சற்று பின்தங்கியுள்ளது என்று தம் உரையில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தினார்.

சமூகத்தில் மூன்று முக்கிய பிரிவினர்மீது கட்டாயமாக கவனம் செலுத்தினால்தான் வாழ்நாள் கற்றல் திட்டத்திலிருந்து இன்னும் அதிகமானோர் நன்மையடைய முடியும் என்று மேலும் அவர் தெரி வித்தார். உடலுழைப்பு ஊழியர்கள் மற்றும் நிபுணத்துவம் அல்லாத அலுவலக ஊழியர்கள், பணியிடைக்கால ஊழியர்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆகியோரை மூன்று முக்கியப் பிரிவினராக அவர் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பத்தால் மாறிவரும் பல்வேறு பணிகள், உடல் உழைப்பு ஊழியர்களையும் சாதாரண அலு வலக ஊழியர்களையும் பெருமளவில் பாதிக்கும் என்ற அவர், அவர் களுடைய வளர்ச்சியும் ஊதியமும் பின்தங்கியிருக்க வேண்டாமெனில் அவர்களுக்கு பொருத்தமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

பணியிடைக்கால வேலைகளில் பணிபுரியும் நடுத்தர வயதினருக்கு, வாழ்நாள் கல்வித் திட்டத்தை திட்டமிடுகையில் அவர்கள் என்ன கற்பது, அதனை எவ்வாறு கற்பது என்ற சந்தேகங்கள் ஏற்படலாம்.

ஆகையால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கற்றல் முறையைப் பின்பற்றினால் அவர்களுக்கு தர மான வாழ்நாள் கற்றல் அனுபவங் களை ஏற்பாடு செய்யலாம் என பரிந்துரைத்தார்.

இரண்டு நாள் நடக்கும் உல களாவிய வாழ்நாள் கற்றலுக்கான உச்சநிலை மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார் சமுதாயக் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய அளவில் வர்த்தகம் நடத்துவதால் ஊழியர் களுக்கு அவ்வளவாக அவை பயிற்சி அளிப்பது இல்லை என்றார்.

இதனால் காலத்திற்கேற்ப போதுமான நவீன திறன், பயிற்சி யின்றி இவ்வூழியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இச்சூழலை மாற்றியமைப்பதற்கு அவர்களுடைய தேவைகளைச் சேர்த்துக்கொள்ளும் விதம் வாழ் நாள் கற்றல் திட்டம் மாறினால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்று அமைச்சர் தர்மன் குறிப்பிட்டார்.

"நாட்டின் பொருளியல் தேவை களுக்கேற்ப ஊழியர்களை தயார் படுத்தும் புது தேசிய திட்டத்தை வரைவது அவசியம்," என்ற அமைச்சர் தர்மன், அரசாங்க நிதி யுதவியோடு இத்திட்டம் அமல் படுத்தப்பட்டால், பல்வேறு சவால் களைச் சந்திக்கும் பிரிவினரை அர வணைத்து அது அவர்களுடைய வேலை வாழ்க்கையை மெருகூட்டும் என்றார். பான் பசிபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் உலகளாவிய வாழ்நாள் கற்றலுக்கான உச்சநிலை மாநாடு இன்று 2வது நாளாக தொடர்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளி லிருந்து கல்வியாளர்கள், அனைத் துலக அமைப்புகளின் தலைவர்கள், துறைசார்ந்த தலைவர்கள், அர சாங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

"வாழ்நாள் கற்றலின் சமூக-பொருளியல் தாக்கத்தை அதிகப் படுத்துதல்," என்ற தலைப்பையொட்டி இந்த இருநாள் மாநாடு நடைபெறு கிறது.