தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவு விநியோக ஊழியர்களில் மூவரில் ஒருவர் விபத்தில் சிக்கினார்

2 mins read
f38bc488-688b-424c-9fb6-03c92e9a600f
-

உணவு விநி­யோக ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்­கி­னர், மருத்­துவ கவ­னிப்பு தேவைப்­படும் வகை­யில் குறைந்­தது ஒரு­மு­றை­யே­னும் விபத்­தில் சிக்­கி­னர். குறிப்­பாக, நீண்ட நேரம் வேலை செய்­தோ­ரும் அதன்­மூ­லம் அதிக ஊதி­யம் ஈட்­டி­யோ­ரும் விபத்­தில் சிக்க அதிக வாய்ப்­பி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இவ்­வாண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்­களில் கொள்கை ஆய்­வுக் கழ­கம் உணவு விநி­யோக ஊழி­யர்­கள் 1,002 பேரி­டம் கருத்­தாய்வு நடத்­தி­யது. அவர்­களில் 16.1 விழுக்­காட்­டி­னர், மருத்­துவ உதவி தேவைப்­படும் அள­விற்­குத் தாங்­கள் விபத்­தில் சிக்­கி­ய­தா­கத் தெரி­வித்­த­னர்.

கிட்­டத்­தட்ட 9.4 விழுக்­காட்­டி­னர் அத்­த­கைய இரண்டு விபத்­து­களை எதிர்­கொண்­ட­தா­க­வும் 7 விழுக்­காட்­டி­னர் மூன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட முறை அத்­த­கைய விபத்­தில் சிக்­கி­ய­தா­க­வும் கூறி­னர்.

வாரத்­திற்கு 51 மணி நேரம் அல்­லது அதற்­கு­மேல் வேலை செய்த உணவு விநி­யோக ஊழி­யர்­களில் 38.3 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு விபத்­தில் சிக்­கி­யது கழ­கத்­தின் ஆய்­வு­மூ­லம் தெரி­ய­வந்­தது.

இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் கவலை­ய­ளிப்­ப­தாக உள்­ளன என்று ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

கடந்த மாதம் விநி­யோ­கத்­தள ஊழி­யர்­கள் கிட்­டத்­தட்ட 60 பேரி­டம் நடத்­தப்­பட்ட அதி­கா­ர­பூர்­வ­மற்ற கருத்­துக்­க­ணிப்பு முடி­வும் இதை எதி­ரொ­லிப்­ப­தாக அமைந்­தது.

அப்­போது, பத்­தில் ஆறு பேர் பணி­யின்­போது காய­ம­டைந்­த­தாகத் தெரி­வித்­த­னர்.

முன்­ன­தாக, விநி­யோ­கத்­தள ஊழி­யர்­க­ளின் மேம்­பட்ட பாது­காப்­பிற்­காக மனி­த­வள அமைச்சு கடந்த 2021ஆம் ஆண்டு ஆலோ­சனைக் குழு ஒன்றை அமைத்­தது. பணி­யின்­போது காய­ம­டைந்­தால் அவர்­க­ளுக்கு மேம்­பட்ட நிதிப் பாது­காப்பை வழங்­கும் வகை­யில் அவர்­க­ளை­யும் பணிக்­கா­லக் காய இழப்­பீட்­டுச் சட்­டத்­தின்­கீழ் கொண்­டு­வ­ர­லாமா என்­பது குறித்து அக்­குழு ஆராய்ந்து வரு­கிறது.

இவ்­வாண்டு இறு­திக்­குள் அக்­குழு தனது பரிந்­து­ரை­களை அர­சாங்­கத்­தி­டம் தாக்­கல் செய்­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.