ஷெல் மோசடியில் $21,220 லஞ்சம் பெற்ற ஆடவர்

1 mins read
65616e6d-b00f-4125-9aca-df438b491dbf
-

ஷெல் நிறுவன எரிபொருள் மோசடி தொடர்பில் அளவையாளர் ஜஸ்பீர் சிங் பரம்ஜித் சிங் மொத்தம் 21,220 வெள்ளி கையூட்டு பெற்றதை ஒப்புக்கொண்டார். கப்பல்களில் நிரப்பப்படும் எரிபொருள் அளவைச் சரியாகத் தெரிவிக்காமல் இருக்க இந்தத் தொகை தரப்பட்டது. பல்வேறு தரப்பினரின் மோசடியால் 2015ல் ஷெல் நிறுவனத்துக்கு 567,000 டாலர் நட்டம் ஏற்பட்டது. சிங்கிற்கு இம்மாதம் 15ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.