ஈசூன் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 162ன் காலித்தளத்தில் 'ஃபிரி ஃபுட் ஃபார் ஆல்' என்ற உணவு அறப்பணி அமைப்பு, இயந்திரம் ஒன்றை அமைத்து இருக்கிறது.
இம்மாதம் 13ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக பரிவு நாளையொட்டி அமைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரம், அந்த வட்டாரத்தில் வசிக்கும் 150 குறைந்த வருமான குடும்பங்களுக்கும் முதியவர்களுக்கும் உதவும்.
அதிலிருந்து அவர்கள் சமைக்கத் தயாராக உள்ள கோழிக்கறியை மாதாமாதம் பெறலாம்.
ஒவ்வோர் குடும்பத்திற்கும் கட்டணத்துடன்கூடிய ஓர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் அவர்கள் 200 கிராம் எடையுள்ள ஏழு கோழிப் பொட்டலங்களைப் பெறலாம்.
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் அந்த அட்டையில் தொடர்ந்து பணம் போடப்படும்.
அந்த இயந்திர தொடக்க நிகழ்ச்சியில் உள்துறை, தேசிய வளர்ச்சி துணையமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் கலந்துகொண்டார்.

