மசெகவின் புதிய மத்திய செயற்குழு; தேர்தலில் போட்டியிடாத கான் கிம் யோங்

2 mins read
160d6562-26f9-46fe-a058-3f642c0b75b6
இடமிருந்து வலம்: அமைச்சர் கான் கிம் யோங், பிரதமர் லீ சியன் லூங், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், ஓங் யி காங், ெஸ்மண்ட் லீ, டான் சுவான்-ஜின், டான் சீ லெங் ஆகியோர். -
multi-img1 of 2

மக்­கள் செயல் கட்சி (மசெக) உறுப்­பி­னர்­கள் அதன் புதிய மத்­திய செயற்­கு­ழுவைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ள­னர். அச்­செ­யற்­குழு கட்­சி­யில் முக்­கிய முடி­வு­களை எடுக்­கும் முதன்மை அமைப்­பா­கும்.

ஈராண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடை­பெ­றும் கட்சி மாநாடு நேற்று ரிசார்ட்ஸ் வொர்ல்டு செந்­தோ­சா­வில் நடை­பெற்­றது. மாநாட்டில் 3,000க்கும் அதி­க­மான கட்சி உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

அதில் மக்­கள் செயல் கட்­சி­யின் 37வது மத்­திய செயற்­குழு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது.

எந்த ஒரு வரி­சைப்­ப­டி­யும் இல்­லா­மல், அச்­செ­யற்­கு­ழு­வில் பிர­த­மர் லீ சியன் லூங், துணைப் பிர­த­மர்­கள் லாரன்ஸ் வோங், ஹெங் சுவீ கியட், மற்றும் சான் சுன் சிங், மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, கிரேஸ் ஃபூ, டெஸ்­மண்ட் லீ, இந்­தி­ராணி ராஜா, ஓங் யி காங், டான் சுவான்-ஜின், டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் ஆகி­யோர் இடம்­பெ­றுவர். ரக­சிய வாக்­கெ­டுப்­பின் மூலம் 12 பேர் செயற்­கு­ழு­வுக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டனர்.

கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங், தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ ஆகி­யோர் 13வது, 14வது ஆக அதி­க­மான வாக்­கு ­க­ளைப் பெற்­றதை அடுத்து மசெ­க­வின் மத்­திய செயற்­கு­ழு­வில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

36வது மத்­திய செயற்­கு­ழு­வில் கட்சித் தலை­வ­ரா­கப் பதவி வகித்த வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், மத்­திய செயற்­குழு தேர்­த­லில் போட்­டி­யி­ட­வில்லை. திரு கான் 2018ஆம் ஆண்­டி­லி­ருந்து மசெ­க­வின் கட்­சித் தலை­வ­ராக இருந்­துள்­ளார்.

முன்­னாள் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான் மசெக கட்­சித் தலை­வ­ராக பதவி வில­கி­யதை அடுத்து, திரு கான் அப்­பொ­றுப்பை ஏற்­றார்.