புதிய கட்டடங்கள் அல்லது பெருமளவில் புதுப்பிக்கப்படும் கட்டடங்களில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்டிகள் இருப்பதை உறுதி செய்யும் நகல் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு காருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் குறைந்தது 1.3 கிலோ வாட் ஆம்பியர் (kVA) சக்திகொண்ட மின்னூட்டிகள் இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்த கட்டடத்துக்கும் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்டிகள் இருப்பதும் அவசியமாகிறது.
மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டு நிலையங்களுக்கான மசோதா, சிங்கப்பூரில் பயன்படுத்தப் படும் மின்னூட்ட நிலையங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை நிலப்போக்குவரத்து ஆணையத்துக்கு வழங்கும்.
மின்னூட்ட நிலையங்களை நடத்தும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது, கட்டடங்களுக்குத் தேவையான மின்னூட்டிகள் இருப்பதை உறுதி செய்வது போன்றவை ஆணையத்தின் பணியாக இருக்கும்.
அதே சமயத்தில் கட்டடங்களில் அமைக்கப்படும் மின்னூட்டி களின் சக்தியையும் மின்னூட்டி வகை களையும் நிறுவனங்கள் தீர்மானிக்க முடியும்.
கடந்த ஜூன் மாதம் இந்த உத்தேசச் சட்டத்தை பொதுமக்கள் ஆலோசனைக்கு அரசாங்கம் முன் வைத்தது.
அதாவது, புதியதாக கட்டப்படும் கட்டடங்களில் அனைத்து வாகன நிறுத்துமிடங்களுக்கும் குறைந்தது ஒரு விழுக்காடு மின்னூட்டிகள் இருக்க வேண்டும், எதிர்கால மின்சார கார்களின் தேவையை பூர்த்தி செய்ய 15 விழுக்காடு வாகன நிறுத்துமிடங்களுக்கு மின்னூட்டும் வசதிகள் இருக்க வேண்டும் என்பது யோசனைகளாகும்.
சிங்கப்பூரில் கார் ஓட்டுபவர்கள் பயணம் செய்யும் தூரம், அதற்குத் தேவையான மின்சக்தி, மின்னூட் டங்களின் சராசரி வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் ஓட்டுநர் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மின்னூட்ட வேண்டியிருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
திருத்தப்பட்ட மசோதாவின்படி ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கி களுக்கு குறைந்தபட்சம் 1.3 கிலோ வாட் ஆம்பியர் சக்தி மூலம் ஐந்தில் ஒரு கார் நிறுத்துமிடங்களில் 7.4 கிலோ வாட் மின்னூட்ட முனை யங்கள் இருக்க முடியும்.

