268 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி; மனிதவள அமைச்சு கண்டுபிடிப்பு

3 mins read
2deaf9ad-6658-40c7-ae36-10ee26eaa2a0
-

கட்­டு­மான நிறு­வ­னம் அமர்த்­திய துணை ஒப்­பந்த நிறு­வ­னம் ஒன்று, ஐந்து வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள பாக்­கியை வைத்­தி­ருந்­தது.

இதனை விசா­ரித்த மனி­த­வள அமைச்­சுக்கு அதிர்ச்சி ஏற்­பட்­டது.

அந்த பிர­தான கட்­டு­மான நிறு­வ­னமே அதன் 268 சொந்த ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள பாக்கி வைத்­தி­ருந்­ததே அதற்குக் கார­ணம்.

ஷாங்­காய் சோங் கீ எனும் அந்­நி­று­வ­னம் 268 ஊழி­யர்­க­ளுக்­கும் ஒரு பகுதி சம்­ப­ளம் மட்­டுமே வழங்­கி­யி­ருந்­தது. எஞ்­சிய சம்­ப­ளத்தை தவணை முறை­யில் வழங்க ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வி­ருக்­கிறது என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­தார்.

துணை ஒப்­பந்த நிறு­வ­ன­மான ஷெங்டா கார்ப்­ப­ரே­ஷ­னின் பத்து வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்­கா­த­தால் அங் மோ கியோ ஸ்தி­ரீட் 62ல் உள்ள 'என்­சி­எஸ் ஹப்' வளா­கத்­தின் நுழைவு, வெளி­யே­றும் வாயில்­களை அடைத்­துக்­கொண்டு அவர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தைத் தொடர்ந்து விவ­கா­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

அந்த வளா­கத்­தின் வர­வேற்புப் பகு­தியை புதுப்­பிக்­கும் பணியை ஏற்று இருந்த ஷாங்­காய் சோங் கீ, ஆறு வெளி­நாட்டு ஊழி­யர்­களை வழங்க ஷெங்டா கார்ப்­ப­ரே­ஷனை அமர்த்­தி­யது.

மனி­த­வள அமைச்­சின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் பத்­தில் ஐந்து பேருக்கு ஷெங்டா கார்ப்­ப­ரே­ஷன் சம்­பள பாக்கி வைத்­தி­ருந்­தது தெரியவந்­தது.

இந்­தச் சம்­ப­வம் இன்­ன­மும் காவல்­துறை விசா­ர­ணை­யில் இருக்­கிறது என்று திரு ஸாக்கி முகம்­மது கூறி­னார்.

ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட ஊழி­யர்­கள்­மீது நட­வ­டிக்கை எடுக்­கப் படுமா என்று மவுண்ட்­பேட்­டன் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லிம் பியௌ சுவான் எழுப்­பிய கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

"முத­லாளி வேண்­டு­மென்றே சம்­பள பாக்­கியை வைக்­க­வில்லை. இந்­தச் சவா­லான கால­கட்­டத்­தை­யும் நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும். கட்­டு­மா­னத் துறை­யில் சில வேளை­களில் சம்­ப­ளம் வழங்­கு­வது தாம­த­மா­கிறது," என்று அமைச்­சர் ஸாக்கி எந்த நிறு­வ­னத்­தை­யும் குறிப்­பி­டா­மல் தெரி­வித்­தார்.

"எனவே சம­ர­சம் மூலம் சிறந்­த­வற்றை செய்ய முயற்சி செய்­கி­றோம். இந்த விவ­கா­ரத்­தில் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­னால் நிறு­வ­னம் மூடப்­பட்டு ஊழி­யர்­களும் பாதிக்­கப்­ப­டு­வார்­கள்," என்­றார் அவர்.

மற்­றொரு பதி­லில் சம்­பள பாக்­கியை கோரி விண்­ணப்­பிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை அண்­மைய ஆண்­டு­ களாக குறைந்­தி­ருப்­ப­தா­வும் அமைச் சர் ஸாக்கி தெரி­வித்­தார்.

சச்­ச­ரவுகளுக்குத் தீர்வு காணும் முத்­த­ரப்­புக் குழு, 2022ல் மாதந்­தோ­றும் 160 சம்­பள பாக்கி கோரிக்கை­களை கவ­னித்து வரு­கிறது. இது, 2019ல் மாதம் 410ஆக இருந்­தது.

இதற்­கி­டையே நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங், உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு மத்­திய சேம நிதி பங்­க­ளிப்பை வழங்கி வெளி­நாட்டு ஊழி­யர் களுக்­கான ஒதுக்கீடு காட்டப் படுவதாக 2015 முதல் 2021 வரை ஆண்­டுக்கு 660 புகார்­கள் வந்­த­தா­கக் கூறி­னார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யின் அல்­ஜு­னிட் குழுத் தொகு­தி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜெரல்ட் கியாம் கேட்ட கேள்வி ஒன்­றுக்கு அவர் அவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

"இதே கால­கட்­டத்­தில் ஆண்­டுக்கு 11 முத­லா­ளி­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான வரம்­பைக் கூட்டிக் காட்டுவதில் விதி­மு­றையை மீறி­யி­ருக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு நிர்­வாகரீதியிலான அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­த­வும் அவர்­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டது. "அப­ரா­தத்­தின் மதிப்பு $1,250லிருந்து $200,000 வரை­யிலும் சரா­சரி அப­ரா­தம் $15,000ஆக­வும் இருந்­தது.

"எச்­ச­ரிக்கை விடுப்­பது, விதி­மீ­றல்­களை சரிசெய்­வது, வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தத் தடை விதிப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் முத­லா­ளி ­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்­டன," என்று அமைச்­சர் கான் மேலும் தெரி­வித்­தார்.