சிங்கப்பூரிலும் ஆட்குறைப்பு செய்த 'மெட்டா' நிறுவனம்

சிங்கப்பூரிலும் ஆட்குறைப்பு செய்த 'மெட்டா' நிறுவனம்

1 mins read
e98294e9-02e5-40be-b602-a10f86cc8288
-

ஃபேஸ்புக் சமூக ஊட­கத் தளத்தை நடத்­தும் 'மெட்டா' தொழில்­நுட்ப நிறு­வ­னம் உலக அள­வில் மேற்­கொண்ட ஆட் குறைப்பு நட­வ­டிக்­கை­யில் சிங்­கப்­பூ­ரர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

'லிங்க்ட்­இன்' தொழில்­தொ­டர்பு கள் தளத்­தில் காணப்­பட்ட பதி­வு­க­ளின்­ப­டி­யும் தான் பெற்ற தக­வல்­க­ளின்­ப­டி­யும் சிங்­கப்­பூ­ரில் குறைந்­தது 10 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம் என்று காட்­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

தனது 87,000 ஊழி­யர்­களில் சுமார் 11,000 ஊழி­யர்­களை 'மெட்டா' ஆட்­கு­றைப்பு செய்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டோருக்கு அது பற்றி நேற்று காலை மின்­னஞ்­சல் அனுப்­பப்­பட்­டது. ஆட்­கு­றைப்­பால் பாதிக்­கப்­பட்ட சிலர், 'லிங்க்ட்­இன்' தளத்­தில் அது குறித்து பதி­விட்டனர்.

காலை­யில் வழக்­கம்­போல அன்­றைக்­கான மின்­னஞ்­சல்­க­ளைப் பார்த்­த­போது ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­தைத் தெரி­வித்த மின்­னஞ்­சல் வந்­தி­ருந்­த­தாக சியா­ஹிட் இஸ்­மா­யில் என்ற ஊழி­யர் லிங்க்ட்­இன் தளத்­தில் கூறி­னார்.

சமூக ஊட­கத் தளத்­தில் பதி­வா­கும் புகார்­களை விசா­ரிக்­கும் குழு­வில் பணி­பு­ரி­வ­தாக அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

மெட்­டா­வின் தென்­கி­ழக்­கா­சிய செய்­திப் பங்­கா­ளித்­து­வப் பிரி­வுக்­குத் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றிய அலெக்ஸ் ஃபென்பி­யும் ஆட் குறைப்பு செய்­யப்­பட்­டார். அவர் முதன்­மு­றை­யாக ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­ன­தா­கக் கூறி­னார்.

நிறு­வ­னத்­தின் பல்­வேறு பிரி­வு­களில் பணி­யாற்­றி­ய­வர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

'மெட்டா' நிறு­வ­னத்­தின் ஆசிய பசி­ஃபிக் தலை­மை­ய­கம் மரினா பே நிதி வட்­டா­ரத்­தில் அமைந்­துள்­ளது. 2018ஆம் நில­வ­ரப்­படி மெட்டா நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர் கிளை­யில் 1,000க்கும் அதி­க­மா­ன­வர்­கள் பணி­யாற்­றி­னர்.