விசாரணையின்போது அழுத மாது: தீர்ப்பு ஒத்திவைப்பு

இல்­லப் பணிப்­பெண்ணை துன்புறுத்­திய குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் மாது ஒரு­வர் விசா­ர­ணை­யின் போது அழத் தொடங்கியதால் வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த 43 வயது மாது கடந்த 2017ஆம் ஆண்­டு ஆகஸ்ட்- செப்­டம்­பர் மாதங்­க­ளுக்­கி­டையே தமது 24 வயது மியன்­மார் நாட்டை சேர்ந்த பணிப்­பெண்ணை பல­முறை துன்­பு­றுத்­தி­னார் என்று கூறப்பட்டது.

பணிப்­பெண்ணை மூச்­சுத் திண­றும் வகை­யில் கழுத்தை நெரித்து அடித்­த­துடன், கொலை மிரட்­டல்­களை­யும் விடுத்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு நேற்று தண்­டனை விதிப்­ப­தாக இருந்­தது. ஆனால் விசா­ர­ணை­யின்போது அவர் அழத் தொடங்­கி­ய­தால் நீதி­பதி விசா­ர­ணையை நிறுத்­தி­னார்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ரின் கண­வர் அவரை சமா­தா­னப்­ப­டுத்­திய பின், 30 நிமி­டங்­க­ள் கழித்து விசா­ரணை தொடர்ந்­தது. தீர்ப்பு நவம்­பர் 24ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­ப­ட்டுள்­ளது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு மன­அ­ழுத்­தம், பதற்­றம் போன்ற மன­நல பிரச்­சி­னை­கள் இருப்­ப­தாக அவ­ரது வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மாதின் சிறு வயது மகன் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தால் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மாதின் அடை­யா­ள­மும் பணிப்­பெண்­ணின் அடை­யா­ள­மும் வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மாதின் வீட்­டில் பாதிக்­கப்­பட்ட பணிப்­பெண் 2017 ஆண்டு மே மாதத்­தில் வேலை செய்ய தொடங்­கி­னார்.

இரு­வ­ருக்­கும் இடையே தொடக்­கத்­தில் நல்ல உற­வு­முறை இருந்­தது என்று விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

ஆனால், அதே ஆண்டு ஜூன் மாதத்­தில், மாது­வின் தாயார் இந்தி­யா­வுக்குச் சென்ற பிறகு, மாது பணிப்­பெண்­ணி­டம் மரி­யாதை குறை­வாக நடந்­துகொண்­டார்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மாது, பணிப்­பெண்­ணி­டம் தனது தூய்­மை­யற்ற துணி­களை சுத்­த­மான துணி­கள் இருக்­கும் அல­மா­ரி­யில் வைக்கச் சொன்­னார். இதை மறுத்த பணிப்­பெண்ணை மாது மிரட்­டி­னார். இத­னி­டை­யில், தூய்­மை­யற்ற சட்டை ஒன்றை எடுத்து பணிப்­பெண்­ணின் முகத்­தில் வீசி­னார். சட்­டை­யி­லி­ருந்த பொத்­தான் அவர் முகத்­தில் பட்­ட­தால், பணிப்­பெண்­ணுக்கு வலி ஏற்­பட்­டது என்று விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இது­போல பல சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன என்று விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

ஒருமுறை பணிப்­பெண்­ணின் இரு கன்­னங்­க­ளி­லும் அறைந்து, அவ­ரின் கழுத்தை நெரித்து அடுப்­பின் அரு­கில் கொண்டு சென்று, கொலை செய்­யப் போவ­தாக மிரட்­டி­னார் மாது என்று விசா­ர­ணை­யில் அறி­யப்­பட்­டது.

பணிப்­பெண் இந்த துன்­பு­றுத்­தலை மாதின் கண­வ­ரி­டம் கூறி­ய­போது, அவ­ரின் மனைவி கொலை மிரட்­டல்­களை நகைச்­சு­வை­யாக கூறி­னார் என்­ப­தை­யும் இது மீண்­டும் நடக்­காது என்­றும் அதைப் பொருட்­ப­டுத்­தா­மல் கூறி­னார்.

2017ஆம் ஆண்டு செப்­டம்­பர் 26ஆம் தேதி அன்று, மாது பணிப்­பெண்­ணி­டம் உணவை மரி­யா­தை­யற்ற முறை­யில் கொடுத்­த­தால், இரு­வ­ருக்­கும் வாய்ச்­சண்டை மூண்­டது. இதற்கு பின், தான் சாப்­பிட்­டத் தட்டை பணிப்­பெண் கழு­வும் போது, மாது அவரை அடிக்க ஆரம்­பித்­தார் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பிட்­டது.

பாதிக்­கப்­பட்­ட பணிப்­பெண் பூசை அறைக்கு சென்று, கதவை பூட்டி, காவல் துறையை தொடர்பு கொண்­டார்.

மாது­வும் அவ­ரின் கண­வ­ரும் கதவைப் பல­மாகத் தட்­டி­னர். மாது வெளி­யி­லி­ருந்­து கத்­து­வதை தொலை­பேசி மூலம் கேட்க முடிந்தது என்று அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

காவல் துறை வீட்டுக்கு வந்த பிறகு மட்­டுமே, பணிப்­பெண் கதவை திறந்­தார். காவல் அதி­காரி பணிப்­பெண்­ணின் முது­கி­லுள்ள காயங்­களை கண்­ட­றிந்­தார்.

பாதிக்­கப்­பட்ட பணிப்­பெண் அவ­ருக்குச் சொந்தமான பொருட்­களை எடுத்­துக்­கொண்டு, காவல் அதி­கா­ரி­க­ளு­டன் வீட்டை விட்டு வெளி­யே­றி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!