ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்க பல்வேறு புதிய வழிமுறைகளையும் திட்டங்களையும் அறி
முகப்படுத்திய சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கும் பாலர் பள்ளிகளுக்கும் சுகாதார மேம்பாட்டு வாரியம் மொத்தம் 135 விருதுகளை அளித்திருந்தது.
சுகாதாரத்தில் அனைவரையும் உள்ளடக்கும் கருப்பொருளைக் கொண்டது இவ்வாண்டின் சிங்கப்பூர் ஆரோக்கிய விருது உடலை கட்டுக்குள் வைப்பதற்கு மட்டுமல்லாமல் மனநலத்தையும் ஊக்குவிக்கும் திட்டங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களும் பள்ளிகளும் இந்த விருது விழாவில் முக்கியமாக அங்கீகரிக்கப்பட்டன. 58 வேலையிடங்கள், 75 பள்ளிகள், சமூகத்தி
லிருக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சுகாதார மேம்பாட்டு வாரிய அரங்கத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விருது விழாவிற்கு தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதுவும் சிறப்பு விருந்தினர்களாக வருகையளித்தனர்.
பாலர் பள்ளிகள் கிருமிப் பரவல் காலத்தின் சவால்களுக்கிடையே பிள்ளைகளை நன்கு பராமரித்ததாக டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
"முதலாளிகளின் மேற்பார்வையில், ஊழியர்களின் நாட்பட்ட நோய்களை தடுத்தும் அவற்றை சமாளித்தும் வேலையிட பாதுகாப்பை மேம்படுத்தவும் முடியும். வேலை
யிடத்திலும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் வெளியில் அவர்களுடைய ஆரோக்கியத்தில் பலன் காணலாம்," என்றார் திரு ஸாக்கி.
சிறிய நடுத்தர நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள பல்வேறு புதிய திட்டங்கள், உழைப்பாளிகள் தங்கள் சொந்த உடல்நலத்திலும் மனநலத்திலும் கூடுதல் கவனம் செலுத்த ஊக்குவித்துள்ளன.
அவ்வாறு பயன்பெற்றவர்களுள் ஒருவரான மச்சிந்தர் கோர், 57, தமது நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களில் 2020, 2021 ஆண்டுகளில் பங்கேற்று ஆரோக்கிய வாழ்க்கைமுறைகளைக் கற்றுக்கொண்டார்.

