சௌத் போன விஸ்தா ரோட்டில் கடந்த திங்கட்கிழமை 17 வயது சிறுவனை மத்திய போதைப்
பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துப் பிடித்தனர். 371 கிராம் கஞ்சாவும் மற்றொரு போதைப்பொருளும் அச்சிறுவனிடம் இருந்து பறி
முதல் செய்யப்பட்டன.
செவ்வாய்க்கிழமை காலை 14 வயதான மற்றொரு சிறுவனையும் அதிகாரிகள் கைது செய்தனர். அச்சிறுவன் லோவர் டெல்டா ரோட்டில் பிடிபட்டார்.
9 கிராம் கஞ்சாவும் மற்ற போதைப்பொருள்களும் சிறுவனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. நவம்பர் 6ஆம் தேதி முதல் நேற்று வரை தீவு முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 96 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஆக இளையவர் இந்த 14 வயதுச் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்
களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு $359,000 என்று மதிப்
பிடப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் 882 கிராம் ஐஸ் போதைப்பொருள் மட்டும் 500 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வார காலத்திற்குப் பயன்படும் அளவுக்கானது. அதேபோல 3,624 கிராம் கஞ்சா 510 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வார காலத்திற்குப் போதுமானது.

