டாக்சி ஓட்டுநருக்கான விதி பற்றி மறுஆய்வு

டாக்சி ஓட்டுநருக்கான விதி பற்றி மறுஆய்வு

1 mins read
131ca03b-999a-44b1-981a-ef21dd2133a3
-
Google News Preferred Icon

டாக்சியில் பயணம் செய்தவர்கள் தங்களது உடைமை எதனையும் டாக்சியில் விட்டுச் சென் றார்களா என்பதை ஓட்டு நர் சோதிக்க வேண்டும் என்பது விதி. இந்த விதி தற்போதைக்குப் பொருத்த மானதா என்பதை நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராயவிருப்பதாக நாடாளு மன்ற உறுப்பினரான இயோ வான் லிங் தமது ஃபேஸ் புக் பதிவில் தெரிவித்து உள்ளார். அண்மையில் பயணி ஒருவர் தமது பணப்பையை தவறுதலாக டாக்சியில் விட்டுச் சென் றதை கவனிக்கத் தவறி யதற்காக அந்த டாக்சியின் ஓட்டுநரை ஆணையம் எச்சரித்தது. இது தொடர் பாக டாக்சி மற்றும் தனி யார் வாடகை கார் சங்கங் கள் கவலை தெரிவித்த தாக பாசிர் ரிஸ்-பொங் கோல் குழுத் தொகுதி உறுப்பினரான திருவாட்டி இயோ கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த இரு சங்கங்களும் ஆணை யத்தை அணுகியதாகவும் கூறிய அவர், இதனைத் தொடர்ந்து ஆணையம் தனது எச்சரிக்கையை மீட்டுக்கொண்டது என் றார். நல்ல பழக்கத்தை நினைவூட்டும் நோக்கில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட தாக ஆணையம் கூறியது.