சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் தலைவராக சில்வியா லிம்மையும் (இடது) தலைமைச் செயலாளராக பிரித்தம் சிங்கையும் மீண்டும் தேர்ந்து எடுத்தது.
ஹவ்காங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிங் எங் ஹுவாட் கட்சியின் உயர்நிலைக் குழுவான மத்திய நிர்வாகக் குழுவில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார்.
அந்தக் குழுவுக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய நிர்வாகக் குழுவை தேர்ந்து எடுக்கிறார்கள்.

