கடைத்தொகுதியில் சமூக மன்றம்; மக்களுக்குப் பெரும் வசதி

கடைத்தொகுதியில் சமூக மன்றம்; மக்களுக்குப் பெரும் வசதி

1 mins read
ebe3a26e-7309-4b5f-baf7-9a44e3db9ff6
-

சிங்­கப்­பூ­ரில் கடைத்­தொ­குதி ஒன்­றில் அமைந்­தி­ருக்­கும் முத­லா­வது சமூக மன்­ற­மான நீ சூன் சென்ட்­ரல் சமூக மன்­றம் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டது.

ஈசூ­னில் உள்ள நார்த் பாயிண்ட் சிட்டி கடைத்­தொ­கு­தி­யில் அமைந்­தி­ருக்­கும் அந்த மன்­றம், குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்கு மிக­வும் வச­தி­யாக 200க்கும் மேற்­பட்ட அர­சாங்­கச் சேவை­களை ஒரே இடத்­தில் வழங்­கும் முத­லா­வது முன்­னோ­டிச் சேவை மைய­மா­க­வும் திகழ்­கிறது.

திறப்பு விழா­வில் கலந்­து­கொண்ட துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், கடைத்­தொ­கு­தி­யு­டன் சமூக மன்­றத்தை இணைப்­ப­தால் மக்­க­ளுக்கு அது மாபெ­ரும் வச­தி­யாக இருக்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கார­ண­மாக இரண்­டாண்­டு­க­ளுக்­கும் அதிக காலம் தாம­த­மாக இந்த மன்­றம் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­தச் சமூக மன்­றம் ஈசூன் ஸ்தி­ரீட் 72ல் உள்ள புளோக் 749ல் முன்பு செயல்­பட்­டது. இப்­போ­தைய புதிய மன்­றம் 6 மடங்கு பெரி­யது.