தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி ரயில் பாதையின் (டிஈஎல்) மூன்றாம் கட்டத்தில் உள்ள 11 ரயில் நிலையங்கள் இன்று பயணிகளுக்குத் திறக்கப்பட்டன.
புது நிலையங்களைக் காண பொது மக்கள் திரளாக வந்திருந்தனர்.
திறக்கப்பட்ட 11 நிலையங்கள் ஸ்டீவன்ஸ், நேப்பியர், ஆர்ச்சர்ட் பொலிவார்ட், கிரேட் வோர்ல்ட், ஹேவ்லாக், ஊட்ரம் பார்க், மேக்ஸ்வெல், ஷென்டன் வே, மரினா பே, கார்டன்ஸ் பை தி பே ஆகியவை. இவற்றில் நான்கு நிலையங்கள், ரயில் நிலைய முனையங்கள் ஆகும்.
ஸ்டீவன்ஸ் ரயில் நிலையத்திலிருந்து டௌன்டவுன் பாதைக்கு மாறலாம். ஆர்ச்சர்ட் நிலையத்தில் வடக்கு-தெற்குப் பாதைக்கு மாறலாம். கிழக்கு-மேற்கு, வட-கிழக்கு ரயில் பாதைகளுக்குச் செல்ல ஊட்ரம் பார்க்கைப் பயன்படுத்தலாம். வட்டப் பாதை, வடக்கு- கிழக்குப் பாதைக்கு இணைப்பாக மரினா பே செயல்படும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை மேலும் பத்து நிலையங்கள் இணைக்கப்படவுள்ளன. இவை 2025க்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


