உலகக் கிண்ண காற்பந்து போட்டி: 70 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

உலகக் கிண்ண காற்பந்து போட்டி: 70 இடங்களில் நேரடி ஒளிபரப்பு

1 mins read
8fcddd6d-9adc-4b0e-b13e-ebc3ba471255
முன்னைய படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரே வாரம்தான் உள்ளது. இந்நிலையில், தீவின் பல இடங்களில் போட்டிகள் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சமூக மன்றங்கள், தேசிய நூலகக் கட்டடம், ஏக்டிவ் எஸ்ஜி விளையாட்டு மையங்கள், ஸ்போர்ட்ஸ் ஹப், சாஃப்ரா நிலையங்கள் ஆகியவற்றில் போட்டிகளைப் பொதுமக்கள் இலவசமாகக் காணலாம்.

ஒவ்வொரு இடத்திலும் ஒளிபரப்பப்படும் போட்டிகள் மாறுபட்டிருக்கும். அனைத்து இடங்களிலும் எல்லாப் போட்டிகளும் ஒளிபரப்படாது.

உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கும். போட்டியை ஏற்றுநடத்தும் கத்தார் இக்குவடோரைச் சந்திக்கும். இறுதி ஆட்டம் டிசம்பர் 18ஆம் தேதி இடம்பெறும்.