மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ கியன் பெங் தலைமையில் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழு, பரிந்துரைக்கப்பட்டு உள்ள மாற்றங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துபேசி கருத்துகளைத் திரட்ட உள்ளது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் இன்று நவம்பர்
14 தொடங்கி டிசம்பர் 9 வரை நடைபெற உள்ளது.
பெற்றோர் பராமரிப்புச் சட்டம் 1995ஆம் ஆண்டு கொண்டு
வரப்பட்டது. ஆகக் கடைசியாக 2010ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இச்சட்டத்தில், மூத்தோரின் தேவைகள் பூர்த்தி செய்யப்
படுவதை உறுதிசெய்யும் நோக்கில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

