வர்த்தகங்களிடம் இருந்து கடந்த மூன்றாண்டுகளில் வருமான வரியாகவும் அபராதங்களாகவும் $270 மில்லியன் மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 7,000 வர்த்தகங்
களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்குத் தணிக்கை மற்றும் புலன்
விசாரணைகளுக்குப் பின்னர் இந்தத் தொகை மீட்கப்பட்டதாக ஆணையம் நேற்று கூறியது.
இவற்றில் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட 398 வர்த்தகங்களும் அடங் கும். விசாரணை முடிவில் 75 வர்த்தகங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவற்றில், 'டைரக்ட் ஃபியூனரல் சர்விசஸ்' நிறுவனத்தின் நிறுவனரான ரோலண்ட் டே ஹாய் சூன் என்பவர் சம்பந்தப்பட்ட வரிஏய்ப்பு வழக்கு இவ்வாண்டு பிரபலமடைந்த ஒன்று.
தமது நிறுவனத்தை பொருள், சேவை வரிக் கட்டமைப்பில் பதிவு செய்யத் தவறியதாகவும் $427,000 வருமான வரி செலுத்தாமல் ஏய்க்க முயன்றதாகவும் கடந்த செப்டம்பர் மாதம் இவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
மற்றொரு முக்கிய வழக்கு 'கிரேஸ் கேஸ்கட்' நிறுவன உரிமையாளர் கிரேஸ் டே தொடர்பானது. ஏறக்குறைய $56,570 வரி ஏய்ப்பு செய் ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தனி உரிமை நிறுவனங்களான இவை இரண்டும் கணக்குகளைப் பராமரிப்பதில் சுணக்கம் காட்டியதாக ஆணையத்தின் சிறு வர்த்தகப் பிரிவு துணை ஆணையாளர் திருவாட்டி லோ லீ கிம் கூறினார்.
இரு நிறுவனங்களின் வருமான வரிக் கணக்கு சமர்ப்பித்தலிலும் இதர கணக்கு விவகாரங்களிலும் முரண்பாடுகள் இருந்ததை ஆணையத்தின் கணக்காய்வாளர்கள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து வரிஏய்ப்பு விவரம் வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
கணிசமான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும், ஆவணங்களைச் சரிவரப் பராமரிக்கத் தவறும் சிறு வர்த்தக நிறுவனங்கள் வரி ஏய்ப்புக்கு ஆளாகக் கூடிய அபாயத்தை எதிர்நோக்குகின்றன.
"இதுபோன்ற சிறிய நிறு வனங்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப் படுபவை.
நிறுவன உரிமை குடும்பத்துக்கு உள்ளேயே இருப்பதால் விற்பனை மற்றும் செலவு தொடர்பான ஆவ ணங்கள் போதுமான அளவுக்குப் பராமரிக்கப்படுவதில்லை," என்றார் திருவாட்டி லோ.
"வரிசெலுத்துவோர் பொதுவாக சட்டதிட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்று ஆணையம் நம்பினாலும் ஒருசிலர் வேண்டு மென்றே வரி மோசடியிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகிறார்கள்," என் றார் அவர்.

