பிள்ளைப் பருவத்திலேயே புத்தாக்கத் திறன் வளர்ப்பு வேண்டும்: அமைச்சர் எஸ் ஈஸ்வரன்

பிள்ளைப் பருவத்திலேயே புத்தாக்கத் திறன் வளர்ப்பு வேண்டும்: அமைச்சர் எஸ் ஈஸ்வரன்

2 mins read
66ff7247-5760-442a-96ec-66043a7e8fbb
நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை அளித்த அமைச்சர் எஸ் ஈஸ்வரன், அங்கிருந்த பிள்ளைகளை சந்தித்து, அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.படம்: பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் -

அறி­வி­யல், கணி­தம், தொழில்­நுட்­பம் போன்ற துறை­களில் நம் பாலர் பள்ளி மாண­வர்­க­ளுக்கு ஓர் ஆர்­வத்தை உண்­டாக்­கி­னால் அது அவர்­க­ளுக்கு பிற்­கா­லத்­தில் புத்­தாக்க முயற்­சி­களில் ஈடு­பட மிக உத­வி­யாக இருக்­கும் என்­றார் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன்.

கெனபி@ஜெலிங்­கில் நவம்­பர் 12ஆம் தேதி­யன்று நடை­பெற்ற 'ஃபியூச்­சர் ரெடி ஃபேர்' என்­னும் நிகழ்ச்­சிக்கு சிறப்பு வரு­கை­ய­ளித்­தார் வர்த்­தக உறவு­ க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான ஈஸ்­வ­ரன்.

இந்த நிகழ்ச்சி, அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம், ஆக்­கத்­தி­றன், தொழில்­ மு­னைவு ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கும் பாடத்­திட்­டங்­களை அறி­மு­கம் செய்­துள்ள பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்­ஸ் ஏற்­பாடு செய்­தது.

சரி­யான சவால்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது மாண­வர்­க­ளுக்கு சிர­ம­மாக இருக்­கும்­போது அவர்­ க­ளுக்கு ஆசி­ரி­யர்­களும் பெற்­றோர்­களும் வழி­காட்­டு­வர் என்­றார் ஆசி­ரி­ய­ரான ஸோயி தொ, 31.

நிதி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா­வும் மாண­வர்­

க­ளின் படைப்­பு­க­ளைக் காண வந்­தி­ருந்­தார்.

"பிள்­ளைப் பரு­வத்­தில் இருக்­கும்­போது பல பழக்­க­வ­ழக்­கங்­கள் பிள்­ளை­க­ளின் மனத்­தில் இடம்­

பி­டிக்­கின்­றன. அத­னால், புத்­தாக்­கத்­தி­ற­னில் ஈடு­பட சிறு வய­தி­லேயே ஊக்­கு­விக்­கும்­போது தங்­க­ளுக்­குத் தெரி­யா­தவை பற்றி கேள்வி கேட்­க­வும் புதி­ய­வற்றை முயற்சி செய்­ய­வும் தயங்க மாட்­டார்­கள்," என்­றார் அவர்.

'ஸ்டெமி' பாடத்­திட்­டம் 12 பாலர் பள்­ளி­களில் 2018ஆம் ஆண்டு முதல் மாண­வர்­களுக்கு சவால் அளிக்­க­வும் அவர்­கள் புத்­தாக்­கச் சிந்­த­னை­யைப் பயன்­ப­டுத்தி, இச்

­ச­வால்­களை சமா­ளிக்க புது­மை­யான தீர்­வு­களை கண்­டு­பி­டிப்­பார்­கள் என்ற நோக்­கத்­தோடு அமல்­

ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது இந்தப் பாடத்­திட்­டம் 180 பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் பள்­ளி­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. 2024ஆம் ஆண்­டுக்­குள் 320 பள்­ளி­களில் இது செயல்­ப­டுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூர் முழுக்­க­வும் ஏறத்­தாழ 50,000 மாண­வர்­கள் இத்­திட்­டத்­தி­னால் பய­ன­டை­வர் என்­றும் நம்­பப்­ப­டு­கின்­றது.