சிங்கப்பூரில் 'பயோன்டெக்' மருந்தாலை

சிங்கப்பூரில் 'பயோன்டெக்' மருந்தாலை

1 mins read
632a946a-57e9-4d41-81d3-a5b330bc0b86
-

'பயோன்­டெக்' மருந்து நிறு­வ­னம் அடுத்த ஆண்டு இறு­தி­யில் சிங்­கப்­பூ­ரில் அதன் முதல் 'எம்­ஆர்­என்ஏ' மருந்து உற்­பத்­தித் தொழிற்­சாலை செயல்­ப­டத் தொடங்­கும் என்று நேற்று உறு­தி­ய­ளித்­தது.

துவாஸ் உயி­ரி­யல் மருத்­து­வப் பூங்­கா­வில் தற்­போது 'நொவார்­டிஸ்' மருந்­தாக்க நிறு­வ­னம் உள்ள இடத்தில் அந்தத் ­தொ­ழிற்­சாலை அமையும்.

ஜெர்மனியைச் சேர்ந்த 'பயோன்டெக்' நிறுவனத்தின் தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரத் தலை­மை­ய­க­மா­க­வும் அது செயல்­படும்.

தொழிற்­சாலை முழு­மை­யா­கச் செயல்­ப­டத் தொடங்­கிய பிறகு 2024ஆம் ஆண்­டுக்­குள் 100க்கு மேற்­பட்ட வேலை­வாய்ப்­பு­களை அது உரு­வாக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

பொறி­யி­யல், நிதி, தரக் கட்­டுப்­பாடு, மனி­த­வ­ளம், விநி­யோ­கச் சங்­கிலி நிர்­வா­கம் போன்ற துறை­க­ளுக்­கு ஆள்­சேர்ப்பு நட­வ­டிக்கை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கிறது.

சிங்­கப்­பூர் புவி­சார் அர­சி­யல்­ரீ­தி­யாக மத்­திய பகு­தி­யில் இருக்­கிறது. சிறந்த விநி­யோக நடு­வ­மாக விளங்­கும் இங்கு திற­னா­ளர், உள்­கட்­ட­மைப்பு போன்­றவை சிறப்­பாக இருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரைத் தேர்வு செய்­தோம் என்று நிறு­வ­னத்­தின் தலை­மைச் செய­லாக்க அதி­காரி டாக்­டர் சியெர்க் பொயட்­டிங் கூறினார்.

சிங்கப்பூர்த் தொழிற்சாலையில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான 'எம்­ஆர்­என்ஏ' தடுப்பு மருந்­து­கள் மட்­டு­மன்றி, புற்­று­நோய்க்­கான தடுப்பு மருந்­து­கள் போன்­ற­வற்­றை­யும் தயா­ரிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக நிறு­வ­னம் கூறியது.