சுவா சூ காங்கில் தொல்லை தந்த பறவைகள் அழிப்பு

சுவா சூ காங்கில் தொல்லை தந்த பறவைகள் அழிப்பு

1 mins read
224744f6-3ee5-488b-ae7d-30adc8fadadc
சென்ற ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி சுவா சூ காங் அவென்யூ 4க்கும் சுவா சூ காங் வேக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் காணப்பட்ட 'செம்மார்பு' கிளிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய பூங்­காக் கழ­கம், சுவா சூ காங் நகர மன்­றம் ஆகி­ய­வற்­றின் ஊழி­யர்­கள் இணைந்து நேற்று சுவா சூ காங் வீட­மைப்­புப் பேட்­டை­யில் தொந்­த­ர­வாக விளங்­கிய நூற்­றுக்கணக்­கான கிளி­க­ளைப் பிடித்­த­னர்.

பிடிக்­கப்­பட்ட பற­வை­களில் ஏறக்­கு­றைய 60 விழுக்­காட்­டுப் பற­வை­கள் கொல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இவை அனைத்­தும் சிங்­கப்­பூரைத் தாய­க­மா­கக்கொண்ட பற­வை­கள் அல்ல என்­ப­தா­லும் இங்கு இவற்­றின் எண்­ணிக்கை பெரு­கி­விட்­டது என்­ப­தா­லும் இத்தகைய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

இந்­தப் பற­வை­கள் கடந்த 30 ஆண்­டு­க­ளாக இந்­தப் பகு­தி­யில் காணப்­ப­டு­வ­தா­கக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் சிலர் கூறி­னர். முன்­பெல்­லாம் மிகப் பெரி­ய கூட்­ட­மா­கப் பறக்­கும் இப்­ப­ற­வை­க­ளின் எண்­ணிக்கை, கட்டுப்படுத்தப்படுவதால் குறைந்­துள்­ள­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

வெளி­நா­டு­களில் இருந்து இங்கு செல்­லப்­பி­ரா­ணி­கள் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளால் கொண்­டு­வ­ரப்­பட்ட கிளி­கள் இங்­குள்ள கிளி­க­ளு­டன் உண­வுக்­குப் போட்­டி­யி­டு­வ­தோடு பொது­மக்­க­ளுக்கு இவை எழுப்­பும் சத்தம் இடை­யூறாக இருப்­ப­தா­க­வும் தேசிய பூங்­காக் கழ­கம் கூறி­யது.