'என்டியு' மாணவர்கள் 218 பேருக்கு மறு தேர்வு

'என்டியு' மாணவர்கள் 218 பேருக்கு மறு தேர்வு

1 mins read
a11b09ac-a7f3-43ce-b249-d3e4e47aa694
-

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­டியு) 218 மாண­வர்­கள், தேர்­வுத்­தாள் ஒன்று முன்­கூட்­டியே இணை­யத்­தில் வெளியான­தை­ய­டுத்து, மீண்­டும் தேர்வு எழுத நேரிட்­டுள்­ளது.

இவர்­களில் பெரும்­பா­லோர் உள­வி­யல் பாடம் பயில்­ப­வர்­கள்.

இம்­மா­தம் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, இந்­தத் தேர்வு இரு­வ­கை­யாக நடை­பெற்­றது.

பெரும்­பா­லான மாண­வர்­கள் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நேரடி­யாக அமர்ந்து தேர்வை எழு­திய வேளை­யில், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த சில மாண­வர்­கள் இணை­யம்­வழி தேர்வை எழு­தி­னர்.

இருப்­பி­னும் தேர்வு நேரத்­துக்கு முன்­பா­கவே மாண­வர்­க­ளின் கற்­றல் இணை­யத்­த­ளத்­தில் அந்­தத் தேர்­வுத்­தாள் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டு­விட்­ட­தைப் பல்­க­லைக்­க­ழ­கம் பின்­னர் கண்­ட­றிந்­தது.

மீண்­டும் தேர்வு எழுத நேரிட்டு உள்ள மாண­வர்­க­ளி­டம் மன்­னிப்­புக் கோரிய நிர்­வா­கம், அனை­வ­ருக்­கும் நியா­ய­மான நடை­மு­றை­யைப் பின்­பற்­ற­வேண்­டி­யி­ருப்­ப­தைச் சுட்­டி­யது.

பாதிக்­கப்­பட்ட மாண­வர்­கள் இதனை ஏற்­றுக்­கொண்­டி­ருப்­ப­தாக வும் மறு தேர்­வுக்­கான நாள் குறித்து அவர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

தேர்வு நடை­மு­றை­களை முழுமையாக மறு­ஆய்வு செய்து, வருங்­கா­லத்­தில் இத்­த­கைய சம்­ப­வங்­கள் நிக­ழா­மல் தடுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் உறு­தி­ அ­ளித்­தது.