மூன்று இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 கூடுகிறது

மூன்று இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 கூடுகிறது

1 mins read
2f245ecc-9c7e-4f63-a5d0-fd036f743bd4
-

போக்­கு­வ­ரத்துத் தேக்­கத்தைத் திறம்­பட சமா­ளிக்­க ஏதுவாக மூன்று இடங்­களில் மின்னியல் சாலைக் கட்­ட­ணம் $1 கூடும்.

மத்­திய விரை­வுச் சாலை­யில் தெற்கு நோக்கி சிராங்­கூன் ரோட்­டிற்­குச் செல்­லும் துணைத் தடம் அல்­லது சாங்­கியை நோக்­கிச் செல்லும் தீவு விரை­வுச் சாலை­யில் உள்ள நுழைவாயில்; காலாங் பாரு மற்­றும் பெண்டமீர் செல்­லும் துணைச் சாலைப் பகுதி தீவு விரை­வுச் சாலை நுழைவாயில்; ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கை நோக்­கிச் செல்­லும் காலாங் பாய லேபார் விரை­வுச் சாலை­யில் டெஃபூ மேம்­பா­லத்­திற்கு அப்­பால் உள்ள நுழை வாயில் ஆகி­ய­வற்றில் கட்­ட­ணம் நவம்­பர் 19ஆம் தேதி முதல் ஐந்து குறிப்­பிட்ட கால நேரத்­தின் போது கூடும்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் இவ்வாறு தெரி­வித்­துள்­ளது.

மின்னியல் சாலை கட்­ட­ணம் இதற்கு முன்னதாக கடந்த செப்­டம்­ப­ரில் மாற்றி அமைக்­கப்­பட்­டது. அப்­போது ஐந்து இடங்­களில் கட்­ட­ணம் $1 கூடி­யது.