புது போக்குவரத்து மையத்தில் ஜூரோங் வட்டார நூலகம்

புது போக்குவரத்து மையத்தில் ஜூரோங் வட்டார நூலகம்

2 mins read
0e441323-d8e6-4d76-9c06-9c8dc26edaf1
புதிய ஜூரோங் ஈஸ்ட் ஒருங் கிணைந்த போக்கு வரத்து மையத்தில் ஜூரோங் வட்டார நூலகம் வசதியாக அமைந்து இருக்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

2027ல் கட்டி முடிக்கப்படும் ஜூரோங் ஈஸ்ட் ஒருங்கிணைந்த மையத்தில் அமையும்

ஜூரோங் வட்­டார நூல­கம், 2027ல் கட்டி முடிக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்ள ஜூரோங் ஈஸ்ட் ஒருங்­கிணைந்த போக்­கு­வ­ரத்து மையத்­திற்கு இட­மா­றும்.

அந்­தப் புதிய மையத்­தில் சமூக மன்­றம், விளை­யாட்டு நிலை­யம், அலு­வ­ல­கங்­கள், சில்­லறை வர்த்­தக இடங்­கள் எல்­லாம் 27 மாடி புளோக் ஒன்­றில் இடம்­பெற்று இருக்­கும்.

அந்த புளோக் பாலம் வழி­யாக எட்டு மாடிக் கட்­ட­டம் ஒன்­று­டன் இணைக்­கப்­படும்.

ஜூரோங் ஏரி வட்­டார உரு­வாக்­கத்­தின் அடுத்த கட்ட பணி­கள் கார­ண­மாக இப்­போ­தைய பல கட்டடங்­கள் பாதிக்­கப்­படும் என்றும் அந்­தக் கட்­ட­டங்­களில் ஜூரோங் வட்­டார நூல­க­மும் ஒன்று என்­றும் அண்­மை­யில் தக­வல்­கள் வெளி­யா­யின.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழில் அந்­தச் செய்தி வெளி­யா­னதை அடுத்து அந்த நூல­கத்தை இடம் மாற்­ற வேண்டாம் என்று விரும்­பிய இரண்டு வாச­கர்­கள், அதன் தொடர்­பில் பொது­மக்­க­ளின் கருத்து­க­ளைப் பரி­சீ­லிக்­கும்­படி நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தைக் கேட்டுக்­கொண்­ட­னர்.

அதற்­குக் கடி­தம் மூலம் பதி­ல­ளித்த அதி­கா­ரி­கள், 2028 முதல் புதிய இடத்­தில் செயல்­ப­ட­வி­ருக்கும் நூல­கம் மக்­க­ளுக்­குப் பெரும் வசதி­யாக இருக்­கும் என்று தெரி­வித்து உள்ள­னர்.

ஜூரோங் ஈஸ்ட் எம்­ஆர்டி நிலை­யத்­தில் நூலகம் அமைந்­தி­ருக்­கும் என்­ப­தால் அங்கு சென்று வரு­வது மக்­க­ளுக்கு மிக­வும் வச­தி­யாக இருக்­கும் என்­றும் அதி­கா­ரி­கள் விளக்­கி­னர்.

புதிய இடத்­திற்கு மாறும் நூலகம், இப்­போ­தைய நூல­கத்­தின் அள­வு­டன் ஒப்­பி­டக்­கூ­டிய அள­வில் இருக்­கும் என்­றும் அதி­கா­ரி­க­ளின் கடி­தம் விளக்­கி­யது.

இப்­போ­தைய நூல­கம் 1988ல் ஜூரோங் ஈஸ்ட் சமூக நூல­க­மாகத் திறக்­கப்­பட்­டது.

பிறகு புதுப்­பிப்பு வேலை­கள் நடந்­தன. 2004 ஜூன் மாதம் சிங்­கப்­பூ­ரின் மூன்­றா­வது வட்­டார நூல­க­மாக அந்த நூல­கம் திறக்­கப்­பட்­டது. நான்கு மாடி­கள், கீழ்த்­தளம் ஆகி­ய­வற்­றில் 12,020 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வு­டன் கூடி­ய­தாக அந்த நூல­கம் இருக்­கிறது.

அதை­யும் இதர சமூக வச­தி­களை­யும் போக்­கு­வ­ரத்து மையத்­தில் அமைப்­ப­தால் மேற்கு வட்­டா­ரத்­தில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்­குச் சேவை­யாற்­றத் தோதாக, பெரும் போக்குவரத்து வச­தி­யுடன் கூடிய சமூக மையம் உரு­வாக வழி ­பி­றக்­கும் என்று அதி­காரி­கள் கடி­தத்­தில் கூறினர்.

புதிய போக்­கு­வ­ரத்து மையத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் 2021ல் தொடங்கி நடந்து வரு­கின்­றன.