செய்திக்கொத்து

கார் பேட்டையில் குறும்புத்தனம்; பதின்ம வயதினர் நால்வர் கைது

கார்பேட்டையில் குறும்புத்தனத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 முதல் 14 வயதுடைய நான்கு பதின்ம வயதினரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

பொங்கோல் கார் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு அந்தச் சம்பவம் பற்றி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பல மாடி கார் பேட்டையின் சுவர்களிலும் உடற்பயிற்சி கூடம் ஒன்றிலும் சிவப்பு நிறச் சாயத்தால் ஆபாசமான வார்த்தைகள் கிறுக்கப்பட்டு இருந்த தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட படங்கள் காட்டின.

புளோக் அறிவிப்புப்பலகை ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார்சைக்கிள் ஒன்றும் அந்தச் சந்தேகநபர்களின் கைவரிசைக்கு இலக்கானதாகத் தெரியவந்ததது. பொங்கோலில் சுமாங் வாக் புளோக் 325ஏ-யில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் பற்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.40 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் புலன்விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை தெரிவித்தது.

சிறுவன், முதியவர் மீது மோதிய

ஆடவருக்கு 8 வாரம் சிறை

வாகன ஓட்டுநர் ஒருவர், 11 வயது சிறுவன் மீது வாகனத்தை மோதிவிட்டு அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யாமல் போய்விட்டார். வேறொரு சம்பவத்தில் அவர் 64 வயது நடையர் மீது மோதிவிட்டார்.

டோ போ ஹெங், 62, என்ற அந்த ஆடவருக்கு நேற்று எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்தச் சம்பவங்கள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை பேரில் டோ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தண்டனை முடிந்து விடுதலையாகும் தேதியில் இருந்து ஐந்தாண்டு காலத்திற்கு அனைத்து வகை வாகன ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கக்கூடாது, பெறக்கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் 2020 ஜூலை 23ஆம் தேதி காலை சுமார் 6.22 மணிக்கு சாய் சீ ஸ்திரீட்டிலும் 2021 ஆகஸ்ட் 2ஆம் தேதி அல்ஜுனிட் கிரசெண்டிலும் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் டோ அந்தச் சிறுவன் மீது மோதிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாது மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள்

கொவிட்-19 தொற்று சூழ­லில் பொது இடத்­தில் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருந்­த­தன் பேரில் பிரிட்­ட­னைச் சேர்ந்த பெஞ்­ச­மின் கிளைன் என்­ப­வர் பிடி­பட்­டார். அவர் தொடர்­பான விசா­ரணை 2021 ஆகஸ்ட் 18ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் நடந்­தது. அப்­போது அரசு நீதி­மன்­றத்­தில் பொது­மக்­கள் கூடத்­தில் லீ ஹுய் யின், 52, என்ற மாது அமர்ந்­தி­ருந்­தார். விசா­ரணை நடந்­த­போது நீதி­ப­தியை நோக்கி தகாத வார்த்­தை­க­ளைக் கூறி­ய­தாக அந்த மாது மீது ஏற்­கெ­னவே குற்­றம் சுமத்­தப்­பட்­டது. நேற்று மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் அவர் மீது சுமத்­தப்­பட்­டன. அரசாங்க ஊழியரிடத்தில் பலவந்­த­மாக நடந்­து­கொண்­ட­தா­கக் கூறும் இரண்டு குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­நோக்­கு­கி­றார்.

விசாரணைக் காவலில் இருக்கும் சிங்கப்பூரரான அந்த மாது, நேற்று இணையம் வழி நீதிமன்றத்தில் முன்னிலையானார். அந்த மாதை மனநிலை கண்காணிப்பிற்காக விசாரணைக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!