சிங்கப்பூர் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள பன்னாட்டு போக்குவரத்து நிறுவனமான கம்பர்ட்டெல்குரோ, 2022 செப்டம்பர் 30ல் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 33% அதிக நிகர வருவாயை ஈட்டி இருக்கிறது.
பொருளியல் நடவடிக்கைகள் சூடுபிடித்து கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்புவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த நிறுவனம், சிங்கப்பூர் பங்குச்சந்தையிடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து இருக்கிறது.
குழும அடிப்படையில் பார்க்கையில், அதிக எரிசக்தி, எரிபொருள் செலவின் தாக்கம் சமநிலையில் இருந்ததாக அறிக்கையில் அது குறிப்பிட்டது.
ஆனால், வாகன ஓட்டுநர்கள் கிடைப்பதும் பணவீக்க நெருக்கடிகளும் தன் பொதுப் போக்குவரத்துத் தொழிலில் ஒரு சவாலாகவே தொடர்ந்து இருந்து வருவதாக அது கூறியது.
சிங்கப்பூரில்தான் அந்த நிறுவனம் ஆக அதிக நடைமுறை லாபத்தைப் பெற்றுள்ளது.
அது மூன்றாவது காலாண்டில் இரண்டு மடங்காகி $46.4 மில்லியனாகக் கூடியது.

