மின்சார சைக்கிளில் பருவ வயதுப் பெண்கள் இருவரை கடந்து சென்ற ஆடவர் ஒருவர், அந்தப் பெண்கள் மீது 'பபிள் டீ'யில் இருக்கும் உருண்டைகளைத் (bubble tea pearls) துப்பினார்.
அந்த இருவரும் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட போதிலும் அவர்களைப் பார்த்து டோ ஜுன் ஷெங், 27, என்ற அந்த ஆடவர் சத்தம் போட்டு திட்டினார்.
இந்தச் சம்பவம் விக்டோரியா ஸ்திரீட்டில் 2021 மார்ச் மாதம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றொருவர் மீது வன்மையாக நடந்துகொண்டதாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருட்டு தொடர்பான இரண்டு குற்றங்களையும் குறும்புத்தனத்தில் ஈடுபட்டதாக ஒரு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு 13 வாரம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

