எம்ஆர்டி திட்டத்துடன் தொடர்புடைய சுரங்க, பாதாள பொறியியல் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம், நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை கோரியது.
அந்த நிறுவனம், நிலப் போக்கு வரத்து ஆணையத்தின் துணைக் குழும இயக்குநர் ஒருவருக்குச் சுமார் $220,000 லஞ்சம் கொடுத்து இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சைனா ரயில்வே டனல் குரூப் (சிங்கப்பூர் கிளை) என்ற அந்த நிறுவனம் மூன்று லஞ்ச குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது.
கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் ஹென்றி ஃபூ யிங் தை என்பவருக்கு அந்த நிறுவனம் லஞ்சம் கொடுத்து இருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து கடன் வடிவில் ஏறத்தாழ $1.24 மில்லியனை லஞ்சமாக வாங்கியதற்காக ஃபூவுக்கு 2021 செப்டம்பரில் ஐந்தறை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை கிடைத்தது.

