வல்லுநர்கள்: 2வது முறை கொரோனா தொற்று அதிக ஆபத்தானதல்ல

வல்லுநர்கள்: 2வது முறை கொரோனா தொற்று அதிக ஆபத்தானதல்ல

2 mins read
d2708d12-ed54-468d-b256-8cf6a0f1d651
-

இரண்­டா­வது முறை­யாக கொவிட்-19 தொற்று ஏற்­ப­டு­வோ­ருக்கு உறுப்பு செயல் இழக்­கும் ஆபத்­தும் மரண ஆபத்­தும் அதிகம் என்று அமெ­ரிக்க ஆய்வு ஒன்று தெரி­வித்­து உள்­ளது.

ஆனால் இதை சிங்­கப்­பூர் வல்­லு­நர்­கள் மறுத்­துள்­ள­னர்.

அமெ­ரிக்­கா­வின் வாஷிங்­டன் பல்­கலைக்­ க­ழ­கத்­தின் மருத்­து­வத் துறை­யும் செயிண்ட் லூயிஸ் ஹெல்த் கேர் சிஸ்­டம் என்ற அமைப்பின் வெட்­ட­ரன் 2 அஃபயர்ஸ் என்ற பிரி­வும் அந்த ஆய்வை நடத்­தின.

மொத்­தம் 5.8 மில்­லி­யன் நோயாளிகளில் இரண்டு அல்­லது அதற்­கும் அதி­க­முறை தொற்­றுக்கு ஆளான கிட்­டத்­தட்ட 41,000 நோயா­ளி­க­ளை­யும் முதல் தடவை தொற்றுக்கு ஆளான 444,000 நோயாளிகளை­யும் உள்­ள­டக்கி ஆய்வு நடத்­தப்­பட்­டது.

புள்­ளி­வி­வ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆய்­வா­ளர்­கள் தங்­கள் முடி­வைச் செய்­தனர். மீண்­டும் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களுக்கு மரண ஆபத்து, முதல் முறை தொற்றியோரு­டன் ஒப்­பி­டு­கை­யில் இரு மடங்கு அதி­கம் என்று அவர்­கள் கூறினர்.­

அதே­போல் மருத்­து­வ­ம­னை­யில் சேர்ந்து சிகிச்சை பெற­வேண்­டிய தேவை­யும் அவர்­களுக்கு மூன்று மடங்கு அதி­கம் என்ற முடி­வுக்கு அவர்­கள் வந்­த­னர்.

இது பற்றி கருத்து தெரி­வித்த சிங்­கப்­பூ­ரின் டியூக்-என்­யுஎஸ் மருத்­து­வப் பள்­ளி­யின் தொற்றுநோய் வல்­லு­நர் பேரா­சிரி­யர் ஊய் எங் யோங், தோற்­று­நோ­யு­டன் தொடர்­பு­டைய நாள்­பட்ட நோய்­கள் பற்றி அமெ­ரிக்க ஆய்­வில் அவ்­வ­ள­வாக தகவல்­கள் இல்லை என்­றார்.

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் மூத்த தொற்­று­நோய் ஆலோ­ச­கர் பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா, அந்த அமெரிக்க ஆய்வின் முடி­வில் பெரும் பிரச்­சி­னை­கள் இருப்­ப­தா­கக் கூறி­னார்.

மீண்­டும் தொற்­றுக்கு ஆளா­வோ­ருக்கும் முதல் முறை தொற்­றுக்கு ஆளா­வோ­ருக்கும் இடை­யில் அதிக வேறு­பாடு உண்டு என்று தெரி­வித்­தார்.

அதே­போல், அமெ­ரிக்க ஆய்வு முடிவுகள் பற்றி கருத்து கூறிய தேசிய பல்­க­லைக்­கழக மருத்­துவமனை­யின் மூத்த தொற்று­நோய் ஆலோ­ச­கர் பேராசிரி­யர் டேல் ஃபிஷர், அந்த ஆய்­வ­றிக்கை குழப்புவதா­கக் கூறி­னார்.

இருந்­தா­லும் அந்த அமெ­ரிக்க ஆய்வு சரி­யான நேரத்­தில் ஓர் அம்­சத்தை நினை­வூட்­டு­கிறது என்றார் அவர்.

அதா­வது, கொவிட்-19 தொற்­றைத் தவிர்த்­துக்கொள்ள வேண்­டும் என்­பதை அது வலி­யு­றுத்­து­கிறது.

குறிப்­பாக கடு­மை­யான நோய் ஆபத்து உள்­ள­வர்­கள் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அந்த ஆய்வு நினை­வூட்­டு­கிறது என்­றார் அவர்.