சிறுமியிடம் அத்துமீறியதைச் சமூக ஊடகம் வழியாக ஒப்புக்கொண்டார்

சிறுமியிடம் அத்துமீறியதைச் சமூக ஊடகம் வழியாக ஒப்புக்கொண்டார்

1 mins read
5f1bbebb-c598-440b-b67c-11b852b30442
-

குடிபோதையில் இருந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதைச் சமூக ஊடகம் வழியாக ஒப்புக்கொண்ட 19 வயது இளையர், தன்மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டார்.

சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆடவரின் பெயரை வெளியிட முடியாது. குற்றம் புரிந்த இளையர், மது கலந்த பானத்தை அந்தச் சிறுமிக்குக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்தபின் அவருடன் பாலியல் உறவுகொண்டார்.

இச்சம்பவம் 2021 செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ்ந்தது. இதைப் பற்றி அவ்விளையரும் அவரின் நண்பர்களும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டதை அடுத்து, பொதுமக்கள் அவர்மீது காவல்துறையில் புகாரளித்தனர்.

அதனையடுத்து, 2021 நவம்பர் 23ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.