அமெரிக்க-சீன தலைவர்கள் சந்திப்பு புதிய தொடக்கம்

அமெரிக்க-சீன தலைவர்கள் சந்திப்பு புதிய தொடக்கம்

3 mins read
9def6ea4-52c1-4382-bba2-aa955439e4ca
புளூம்பர்க் பொருளியல் மாநாட் டில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தர்மன்: உரசல் இருந்தாலும் தனித்தனிப் பாதையில் செல்லாத வரை பாதுகாப்பானது

முரண்­பாடு இல்­லாத அமெ­ரிக்க-சீன உறவு என்­பது ஓர­ள­வுக்கு சாத்­தி­ய­மில்­லா­மல் போக­லாம் என்ற­ போ­தி­லும் அதன் கார­ண­மாக உல­கப் பொரு­ளி­யல் இரண்­டா­கப் பிள­வு­பட்­டு­வி­டாது என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்து உள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்று வரும் '2022 புளூம்­பர்க் புதிய பொரு­ளி­யல் மாநாட்­டில்' பங்­கேற்று உரை­யாற்­றிய அவர், அமெ­ரிக்க-சீன பொரு­ளி­யல் நில­வ­ரம் குறித்து பேசி­னார்.

"வர்த்­த­கம், முத­லீடு, தர­வு­கள், பணம் செலுத்­து­தல், நிதி முறை, அறி­வார்ந்த சொத்து உரு­வாக்­கம் போன்­ற­வற்­றில் அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் தனித்­த­னிப் பாதை­யில் செல்­வ­தாக நாம் கற்­பனை செய்து பார்த்­தால், அந்­தப் போக்கு உல­கிற்கு மிகுந்த ஆபத்­தா­னது என்­பதை உண­ர­மு­டி­யும்.

"உலக நாடு­க­ளி­டையே பல­

த­ரப்­பட்ட முரண்­பா­டு­கள் காணப்­பட்­டா­லும் அது, ஒவ்­வொன்­றும் தனித்­த­னியே செல்­வ­தைக் காட்­டி­லும் மிக­வும் பாது­காப்­பா­னது," என்­றார் திரு தர்­மன்.

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் நேர­டி­யா­கச் சந்­தித்­துப் பேசி­ய­தற்­குப் பின்­னர் திரு தர்­ம­னின் கருத்து வெளி­யாகி உள்­ளது.

ஈராண்­டு­க­ளுக்கு முன்­னர் திரு பைடன் அமெ­ரிக்க அதி­ப­ரா­கப் பதவி ஏற்ற பின்­னர் சீன அதி­பரை நேர­டி­யா­கச் சந்­தித்­தி­ருப்­பது இது முதல்­முறை.

பரு­வ­நிலை மாற்­றம், உண­வுப் பாது­காப்பு போன்­றவை உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில் ஒத்­து­ழைப்பை மீட்க, அந்த சந்­திப்­பின்­போது இரு தலை­வர்­களும் இணங்­கி­னர்.

மிக­வும் அவ­சி­ய­மான புதிய தொடக்­கம் என்று இந்­தச் சந்­திப்பை திரு தர்­மன் வர்­ணித்­தார். மேலும், கொவிட்-19 கொள்­ளை­நோ­யி­

லி­ருந்து மீண்டு, பண­வீக்­கத்­து­டன் போராடி வரும் உல­கின் பொரு­ளி­யல், வளர்ச்­சிப் பாதை­யில் செல்ல நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் உத­வக்­கூ­டி­யது இந்­தச் சந்­திப்பு என்­றும் அவர் கூறி­னார்.

பாலி­யில் நடை­பெ­றும் ஜி20 உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் நடை­பெற்ற அந்த பேச்­சு­வார்த்­தைக்­குப் பின்­னர் பேசிய சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி, இரு­த­ரப்பு உற­வு­க­ளின் தடு­மாற்­றத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, உறவை நிலைப்

­ப­டுத்­து­வ­தில் அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

2018ஆம் ஆண்டு முதலே அமெ­ரிக்க-சீன உற­வில் உர­சல் நிலவி வரு­கிறது. இறக்­கு­ம­தித் தீர்வை விவ­கா­ரத்­தில் இரு நாடு­களும் போட்டி போட்­டுக்கொண்டு அறி­விப்­பு­களை வெளி­யிட்­டன. அண்­மை­யில்­கூட சில­வகை நவீன பகுதி-மின்­க­டத்­தித் தொழில்­நுட்­பங்­களை சீனா­வுக்கு ஏற்­று­மதி செய்ய அமெ­ரிக்கா தடை விதித்­தி­ருந்­தது.

இத­னைக் குறிப்­பிட்டு நேற்று புளூம்­பர்க் மாநாட்­டில் பேசிய திரு தர்­மன், "அமெ­ரிக்கா-சீனா இடை­யி­லான பதற்­றம் குறைந்­தா­லும் அமைதி நிலைப்­ப­டுமா என்று உறு­தி­யா­கக் கூறு­வ­தற்­கில்லை. ஆயி­னும் பதற்­றம் குறைந்த சூழல் உல­கிற்கு அமை­தி­யைத் தரும்," என்­றார்.

மேலும் அவர் கூறு­கை­யில், "இந்த விவ­கா­ரத்­தில் இது­வரை உச்­சத்­தைத் தொட்­டு­வி­ட­வில்லை; முன்­னோக்­கிச் செல்ல வேண்­டிய தூரம் இன்­னும் உள்­ளது.

"நிச்­ச­ய­மற்ற நிலைக்கு இடையே உல­கின் அடிப்­ப­டைத்­தன்­மையை நாம் பார்க்க வேண்­டும். நினைத்­த­தைக் காட்­டி­லும் முற்­றி­லும் மாறு­பட்ட நிலைக்கு எது­வும் மாற­லாம் என்று எதிர்­பார்க்க வேண்­டும்.

"தவறு நிக­ழக்­கூ­டும் என்­பதை முன்­கூட்­டியே எதிர்­பார்த்து, அந்­தத் தவறு நேரா­மல் தடுக்க முய­ல­வேண்­டும்," என்று விளக்­கி­னார்.

உல­கப் பொரு­ளி­யல் எதிர்­கொள்­ளும் பல்­வேறு சவால்­கள், அச்­சு­றுத்­தல்­களில் இருந்து மீள அமெ­ரிக்க-சீனத் தலை­வர்­க­ளின் சந்­திப்பு நீண்ட காலத்­திற்கு உத­வும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று தொடங்­கிய புளூம்­பர்க் பொரு­ளி­யல் மாநாடு நாளை வரை தொடரும்.

உல­கின் 53 நாடு­க­ளைச் சேர்ந்த 500க்கும் மேற்­பட்ட தலை­சி­றந்த நிறு­வனங்களின் நிர்­வா­கி­கள் இந்த மூன்று நாள் ­மா­நாட்­டில் பங்­கேற்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.