தகராறு, தாக்குதல்: பயணிக்கு தடை விதித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
விமானத்தினுள் மூர்க்கத்தமாக நடந்துகொண்ட ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அனைத்து விமானங் களிலும் பயணம் செய்ய இயலாத வகையில் தடை செய்யப் பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பயணிகளுக்கான பட்டிய லில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பேங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வந்த எஸ்க்யூ711 விமானத்தில் உணவு பரிமாறப்பட்டபோது அவர் தகராறு செய்ததோடு மீண்டும் மீண்டும் மதுபானம் கேட்டு விமான ஊழியர்களைத் தொல்லைப்படுத்தினார். அவர் எல்லைமீறி நடந்து கொண்டது காணொளியில் தெரிந்தது.
விமான ஊழியர்களிடம் அவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது. சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் துணைக் காவற்படையிடம் அந்த ஆடவர் ஒப்படைக்கப் பட்டார். கோபன்ஹேகன் இணைப்பு விமானத்தில் அவர் பயணம் செய்ய வேண்டும். இனி தகராறு செய்யமாட்டேன் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து கடும் எச்சரிக்கைக்குப் பின் இணைப்பு விமானத்தில் பயணம் செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், எஸ்க்யூ352 என்னும் அந்த விமானத்தில் ஏறியதும் அவர் மீண்டும் மூர்க்கத்தனமாக நடந்து விமான ஊழியர் ஒருவரைத் தாக்கியதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இருப்பினும், பயணத் தடை விதிக்கப்பட்ட அந்த ஆடவர் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
'ஸ்டார்ஹப்' இணையச் சேவை புகார் விகிதம் அதிகம்
விரிவலை இணையச் சேவை (பிராட்பேண்ட்) தொடர்பாக ஸ்டார்ஹப் நிறுவனம் இதர தொலைத்தொடர்பு நிறுவனங் களைக்காட்டிலும் ஆக அதிக புகார்களைப் பெற்றுள்ளதாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் விரிவலை இணையச் சேவை தொடர்பாக 10,000 சந்தாதாரர்களுக்கு 8.76 புகார் களையும் செப்டம்பர் மாதம் 5.09 புகார்களையும் ஸ்டார்ஹப் பெற்றது. அதேநேரம், சிங்டெல் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் (10,000 சந்தாதாரர்களுக்கு) 0.25 புகார்களையும் செப்டம்பர் மாதம் 0.14 புகார்களையும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'மைரிபப்ளிக்' தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையச் சேவை தொடர்பில் 0.31 மற்றும் 0.20 புகார்கள் அந்த இரு மாதங்களில் செய்யப்பட்டன. மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனமான எம்1, ஆகக்குறைவாக 0.20 மற்றும் 0.10 புகார்களைப் பெற்றது. ஆயினும், 'வியூக்வெஸ்ட்' நிறுவனம் இரு மாதங்களிலும் தலா 0.70 புகார்களைப் பெற்றதாக ஆணையம் தெரிவித்தது.
இணையச் சேவை வழங்குநர் கவனித்து செயல்படக் கூடிய அளவுக்கு தொலைத்தொடர்பு சேவை மீது தெரி விக்கப்படும் அதிருப்தி, புகாராகக் கருதப்படுகிறது என்றும் அது குறிப்பிட்டது.

