நாடகம் உருவாக தளம் அமைக்கும் கவிதை

நாடகம் உருவாக தளம் அமைக்கும் கவிதை

2 mins read
00a13523-d645-4345-b500-87c99c840afc
கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் கவிதை, நாடகம் தொடர்பான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். படம்: கவிமாலை சிங்கப்பூர் -

நாட­கங்­கள் பிறப்­ப­தற்­கான உந்­து­

த­லாக கவி­தை­க­ளின் கள­மும் காட்சிப் படி­மங்­களும் விளங்­கு­கின்­றன. அதே சம­யம், ஷேக்ஸ்­பி­யர் போன்ற நாடக மேதைகளின் படைப்­பு­கள் இருப்­பதுபோல, மேடை தனிப்­பேச்­சுகளில் கவி­ந­யம் நெய்­யப்­ப­டு­வது வழக்­க­மா­கி­விட்­டது.

இப்­படி, கவி­தைக்­கும் நாட­கத்­துக்­கு­மான ஆழ­மான பிணைப்­பு­களை ஆராய்ந்­தது, பிர­பலக் கவி­ஞ­ரும் நாட்­டுப்­பு­ற­வி­யல் அறி­ஞ­ரு­மான திரு எம்.டி. முத்­துக்­கு­மா­ர­சா­மி­யு­டன் நிகழ்ந்த 'கவிதை எனில், நாட­கம்?' உரை­யா­டல்.

'கவி­மாலை சிங்­கப்­பூர்' இணைந்து படைத்த 'கவிதை எனில், நாட­கம்?' நிகழ்வு நவம்­பர் 6ஆம் தேதி சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வில் நடந்­தே­றி­யது. திரு முத்­துக்­கு­மா­ர­

சா­மி­யின் சிறப்­புரை, அவ­ரின் 'சாக­சப் பிழை' கவி­தையை ஒட்டி திரு­மதி ராணி கண்ணா படைத்த நவீன நாட­கம், கவி­ஞ­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல் என பல அங்­கங்­கள் அடுத்தடுத்து இடம்­பெற்­றன.

கவி­தை­க­ளி­லி­ருந்து நாட­கங்­கள் பிறப்­பது குறித்து அதி­கம் பேசப்

­ப­டு­வ­தில்லை என்று கூறிய திரு முத்­துக்­கு­மா­ர­சாமி, கவி­தை­க­ளின் கருப்­பொ­ருள்­களும் வடி­வங்­களும் நாட­கங்­கள் உரு­வாக தளங்­கள் ஏற்­படுத்தித் தரு­கின்றன என்றார்.

"கவி­தை­களில் இடம்­பெ­றும் முக­மற்ற கதா­பாத்­தி­ரங்­கள் தொடர்பு கொண்டு உரை­யா­டு­கின்­றன. அத்­த­கைய கதா­பாத்­தி­ரங்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் வெவ்­வேறு பின்­பு­லங்­களை அளிக்­கின்­ற­னர் வாச­கர்­கள். அவற்­றுக்குப் பல்­வேறு வகை­களில் உணர்­வூட்­டும்­போது, நாட­கங்­கள் பிறக்­கின்­றன," என்றார் கவி­ஞர்.

மனி­தர்­க­ளின் அந்­த­ரங்க உணர்­வு­களை இயற்­கை­யின்­மீது ஏற்றிச் சொல்­வது, சங்க இலக்­கி­யங்­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட வரப்­பி­ர­சா­தம் என குறிப்­பிட்ட அவர், இன்று வரைக்­கும் தொட­ரும் அந்த பாரம்­ப­ரி­யத்­தி­னால் பல கோணங்­களில் காட்­சிப்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது என்றார்.

கவிதை, நாட­கம் ஆகி­ய­வற்­றில் தங்­க­ளது அனு­ப­வங்­களை பகிர்ந்து­ கொண்­ட­னர், கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்ற திரு­மதி ராணி கண்ணா, திரு க. செல்­வ­நா­தன், திரு முத்துக்­ கு­மா­ர­சாமி ஆகி­யோர்.

அம்­பி­கா­பதி, அம­ராவதி­யைத் தழு­விய 'பதி­வதி ஒரு காதல்' கவிதை நாட­கத்தை 1999ல் தாம் இயக்கியதை நினைவுகூர்ந்த திரு செல்­வ­நா­தன், கவி­ஞர் பிச்­சி­னிக்­காடு இளங்கோ, இறுதிக்காட்­சி­யில் இடம்­பெ­றவேண்டிய நூறு பாடல்­களை மாற்றி, நூறு செய்திகள் கொண்ட ஒரு பாடல் புனைந்ததை சுட்­டி­னார்.

இவ்­வகை­யில், நவீன, வேறு­பட்ட முறை­யில் படைக்­கப்­படும் கவி­ந­ய­மா­னது நாட­கங்­களில் புகுத்­தப்

­ப­டும்­போது அது பல்­வேறு வயதி­ன­ரை­யும் கவரவல்­லது என்ற கருத்தை கலந்­து­ரை­யா­டல் வலியு­றுத்­தி­யது.