சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஓசிபிசி வங்கி 50% கூடுதல் கடன்

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஓசிபிசி வங்கி 50% கூடுதல் கடன்

1 mins read
5ed91430-b616-4454-8535-38278c545b2d
-

நீடித்து நிலைப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத் தும் சிறிய, நடுத்தர நிறு வனங்களுக்கு ஓசிபிசி வங்கி வழங்கும் கடன் அளவு ஆண்டு அடிப்படையில் 50 விழுக்காடு அதிகரிக்க உள்ளது. இந்தத் தொகை, ஆண்டிறுதியில் $3 பில்லியனைத் தொடும். மலேசி யா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இந்தக் கடன்களைப் பெறும். இது, ஆண்டுக்காண்டு அடிப்படை யில் மும்மடங்கு அதிகம். இவற்றில் 500 நிறுவனங்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவை. இங்கு வழங்கப்படும் கடன் களில் 25% புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கும் எரிசக்தி ஆற்றல் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

நீடித்து நிலைப்பதற்கான திட்டங்களைத் தொடங்கும் நிறுவனங்கள், திட்டங்களை எளிமையாகச் செயல்படுத்த வும் செலவுகளை குறைக்க வும் நோக்கமாகக் கொண்டு 2020 நவம்பர் முதல் இந்தக் கடன்களை ஓசிபிசி வங்கி வழங்கிவருகிறது. செலவு களோடு நிபுணத்துவ பற்றாக் குறை, வரம்புக்கு உட்பட்ட வளங்கள் போன்ற சவால் களையும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர்நோக்கு வதாக வங்கி கூறியது.