'எனது தமிழ் இசை உலக அரங்கில் ஒலிக்க ஆசை'

'எனது தமிழ் இசை உலக அரங்கில் ஒலிக்க ஆசை'

2 mins read
ee6dd244-cc9e-4b53-865c-a1df80679841
சித்தர்த் என்ற ராமகிருஷ்ணா கே. படம்: அவரே -

தமி­ழை­யும் ஆங்­கி­லத்­தை­யும் தம் அடை­யா­ளத்­தின் அங்­கங்­க­ளா­கக் கரு­தும் சித்­தர்த் என்ற ராம­

கி­ருஷ்ணா கே, அதையே தம் இசை­யி­லும் வெளிப்­ப­டுத்த விரும்­பி­னார்.

உள்­ளூர் இசைக்­க­லை­ஞ­ரான இவர், 'பற­வை­கள்' என்ற 'பாப்' பாடலை இசைக் காணொ­ளி­யாக வெளி­யிட்­டுள்­ளார். 'நினை­வு­கள்' என்ற கருப்­பொ­ரு­ளில் அமைந்த இந்­தப் பாடல், இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதம் சமூக ஊட­கங்­களில் தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் வெளி­யி­டப்­பட்­டது.

"சிங்­கப்­பூர் சூழ­லில் ஆங்­கி­லம் என்­பது நமது அன்­றாட வாழ்க்­கை­யின் ஓர் அங்­கம். அதே நேரம் தமிழ் இசை­யைக் கேட்டு, தமிழ்த் திரைப்­ப­டங்­க­ளைப் பார்த்து, வளர்ந்த நான், எனது தமிழ் கலா­சா­ரத்­து­டன் இணைந்­தி­ருக்க விரும்­பி­னேன்," என்று கூறி­னார் 29 வயது சித்­தர்த்.

நினை­வுக்­கும் நிஜத்­திற்­கும் இடையே சித்­தர்த்­தின் மனம் சிக்­கிக்­கொண்ட வித­மாக அமைந்த காணொ­ளியை ஷாரிக் ஃபாரூக் இயக்­கி­யி­ருந்­தார். அத்­து­டன் ஆதித்யா மாணிக்­க­ஷெட்டி வடி­

வ­மைப்­பில் சிறப்­புக் காட்­சி­ய­மைப்பு உத்­தி­களும் கையா­ளப்­பட்­டன.

"இன்­றைய மின்­னி­லக்க உல­கில், நினை­வு­கள் என்­பவை ஒரு 'ஸ்வைப்' தொலை­வில் உள்­ளது. நம் நினை­வு­களும் எப்­போ­தும் உண்­மை­யைச் சித்­திரிப்­ப­தில்லை. ஒரு தனி­ம­னி­தன் அனு­ப­விக்­கும் முரண்­பட்ட நினை­வு­களை ஒரு­வ­ரின் மனம் எப்­படி வேறு கோணத்­தில் சித்­திரிக்­கிறது என்­ப­தைக் காட்ட எண்­ணி­னேன்," என்­றார் சித்­தர்த். பாட­கர், பாட­லா­சி­ரி­யர், தயா­ரிப்­பா­ளர் என்­னும் மூன்று பரி­மா­ணங்­க­ளைக் கொண்ட சித்­தர்த், 'பிறந்­தேன்' என்னும் தமது முதல் பாடலை 2020ல் வெளி­யிட்டார். 16 வய­தி­லி­ருந்தே இசை­ அமைக்­கத் தொடங்­கிய இவர், 'ஹிப்-ஹாப்', 'ராக்', 'எலக்ட்­ரானிக்', இந்­திய திரைப்­பட இசை, இந்­திய பாரம்­ப­ரிய இசை ஆகி­ய­வற்­றி­லி­ருந்து தம் சொந்த இசையை உரு­வாக்­கி­னார்.

சிறு வய­தி­லி­ருந்தே சொந்­த­மாக இசை­ய­மைக்­கத் தொடங்­கிய பின்­னர், 'சங்கே முழங்கு', 'கலா உட்­ச­வம்' ஆகிய தயா­ரிப்­பு­க­ளி­லும் கவிதை நிகழ்ச்­சி­க­ளி­லும் இசை­ய­மைக்க ஆரம்­பித்­தார்.

உல­கத் தமி­ழர்­க­ளைத் தம் இசை சென்­ற­டைய வேண்­டும் என்று விரும்­பும் சித்­தர்த், ­வ­ரும் ஆண்­டு­களில் பல இசைப் படைப்­பு­களை வெளி­யிட இலக்கு கொண்­டுள்­ளார்.