மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிப்பு; ஊக்கத்தொகை குறைப்பு

மின்சார வாகன ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிப்பு; ஊக்கத்தொகை குறைப்பு

2 mins read
9f1aef6d-92ec-40c8-9e03-460c4865e4ee
-

வர்த்­தக வாக­னங்­களை வாங்­கு­வோர் மின்­சா­ரத்­தில் இயங்­கும் வாக­னங்­களை வாங்­கும்­போது ஊக்­கத்­தொ­கை­யாக அளிக்­கப்­பட்டு வரும் வரிக்­க­ழி­வு­கள் 2023 ஏப்­ரல் 1 முதல் குறைக்­கப்­பட உள்­ளன.

வர்த்­தக வாகன கரிம வெளி­யேற்­றத் திட்­டம் மாற்றி அமைக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து வரிக்

­க­ழிவு குறைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அதற்­கேற்ப, தர­வ­ரிசை 'ஏ'யில் இடம்­பெற்­றுள்ள இலகு ரக மின்­சார வர்­த்தக வாக­னங்­க­ளுக்கு அளிக்­கப்­பட்டு வந்த $30,000 ஊக்­கத்­தொகை $15,000 என பாதி­யா­கக் குறைக்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்க அமைப்­பு­கள் நேற்று தெரி­வித்­தன.

மேலும், வர்த்­தக வாகன கரிம வெளி­யேற்­றத் திட்­டம் 2025 மார்ச் 31 வரை மேலும் ஈராண்­டுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவை கூறின.

தர­வ­ரிசை 'பி'யில் இடம்­பெற்­றுள்ள வாக­னங்­க­ளுக்­கான வரிக்­

க­ழிவு $10,000லிருந்து $5,000ஆகக் குறை­யும்.

அதே­நே­ரம் அதி­கக் காற்று மாசை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாக­னங்­கள் இடம்­பெற்று உள்ள தர­வ­ரிசை 'சி'க்கான வழிக்­க­ழிவு $10,000 லிருந்து $15,000க்கு உயர்த்­தப்­ப­டு­கிறது.

வர்த்­தக வாகன கரிம வெளி­யேற்­றத் திட்­டத்­தில் மாற்­றங்­கள் நிக­ழக்­கூ­டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

தர­வ­ரிசை 'ஏ'யில் இடம்­பெற்­றுள்ள வாக­னங்­க­ளுக்­கான வரிக்­

க­ழிவு $10,000 வரை குறைக்­கப்­ப­ட­லாம் என்று அச்­செய்தி அப்­போது குறிப்­பிட்­டது.

அப்­போது அந்­தச் செய்தி வாக­னத் துறை­யில் அதிர்ச்­சியை ஏற்­

ப­டுத்­தி­யது.

வாக­னங்­களை வாங்­கு­வோ­ரும் விற்­போ­ரும் மின்­சார வாக­னங்­

க­ளுக்கு மாறத் தயா­ராகி வரும் வேளை­யில் ஊக்­கத்­தொ­கையை வெட்­டு­வது காற்­றுத் தரத்தை மேம்­

ப­டுத்­தும் சிங்­கப்­பூ­ரின் இலக்­கில் எதிர்­வி­ளைவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று சிலர் கூறி­னர்.

மின்­சா­ரத்­தி­லான வர்த்­தக வாக­னங்­க­ளுக்கு தொடக்­க­விலை அதி­க­மாக இருக்­கிறது என்று வாக­னத் துறை­யி­னர் கவ­லைப்­ப­டு­வதை கவ­னத்­தில் கொள்­வ­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்து உள்­ளது.

தர­வ­ரிசை 'ஏ'க்­கான ஊக்­கத்­தொ­கையை அதி­க­மா­கக் குறைக்­கா­மல் கணி­ச­மான அள­வில் குறைத்­தி­ருப்­ப­தா­க­வும் நேற்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­து­டன் இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் வாரி­யம் கூறி­யது.

அடுத்த ஆண்டு முதல், கிலோமீட்டருக்கு 123 கிராம் கரிமத்தை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமே தரவரிசை 'ஏ'யில் சேர்க்கப் படும். தற்போது அந்த அளவு கிலோமீட்டருக்கு 150 கிராம் என்று உள்ளது.