குளியல் அறை கண்ணாடிக் கதவு சிதறலும் காரணமும்

குளியல் அறை கண்ணாடிக் கதவு சிதறலும் காரணமும்

2 mins read
666fc072-0412-49ee-9eb3-3b4daf82b317
குளியலறை கண்ணாடிக் கதவு நொறுங்கி விழுந்ததால் பாதிக்கப்பட்ட குழந்தை. படம்: திருவாட்டி லி -
Google News Preferred Icon

சிராங்கூன் பகுதியில் உள்ள 'தி கார்டன்ஸ் ரெசிடன்ட்ஸ்' கூட்டு

ரிமை அடுக்குமாடி புளோக்கின் வீடு ஒன்றில் குளியல் அறை கண்ணாடிக் கதவு திடீரென்று சிதறி உடைந்து விழுந்தது.

அப்போது குளித்துக்கொண்டு இருந்த இரண்டு வயது குழந்தையும் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு இருந்த பாட்டியும் காயம் அடைந்துவிட்டனர்.

இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பரில் நிகழ்ந்தது. மருத்துவ மனையில் மருத்துவர்கள் குழந்தையின் உடலில் குத்தி இருந்த கண்ணாடித் துகள்களைக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செலவிட்டு வெளியே எடுத்ததாக குழந்தையின் தாயாரான திருவாட்டி லி என்பவர் கூறினார்.

இதனிடையே, தி கார்டன்ஸ் ரெசிடன்ட்ஸ் புளோக்கைக் கட்டி விற்ற 'கார்டன்ஸ் டெவலப்மெண்ட்' நிறுவனம், இது போன்ற மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பற்றி தனக்குத் தெரியும் என்று கூறியது.

ஏதோ அதிர்ச்சியால் அல்லது தன்னிச்சையாக கண்ணாடி சிதறி இருக்கலாம் என்று அதன் பேச்சாளர் கூறினார்.

ஒப்பந்தக்காரர் முறையான நிபந்தனைகளைப் பின்பற்றி கண்ணாடிக் கதவுகளைப் பொருத்தி இருக்கிறார் என்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயன்படுத்தப்பட்டு உள்ள பொருள்களும் கட்டட, கட்டுமான ஆணையத்தின் வழிகாட்டி நியதி களுக்கு உட்பட்டவை என்று பேச்சாளர் விளக்கினார்.

இதனிடையே, 'ஏஸ்டெக் டெஸ்டிங் லேபரட்டரி' என்ற ஆய்வுக் கூட நிறுவனத்தின் ஆய்வு உரு வாக்கப் பொறியாளரான விக்டர் சியா, செயல்திறன் சிறப்பாக இருப்பதால் சிங்கப்பூரில் ஓரிழைக் கண்ணாடிதான் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார்.

வெப்பத்தின் மூலம் வலு சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் கண்ணாடி யதார்த்தமாக சிதறாது.ஆனால், அதன் மீது இலேசாக ஏதாவது பட்டாலும் உடனே எளி தில் உடைந்துவிடும் என்று அவர் விளக்கினார்.