சிங்பாஸ் 1 மணி நேரம் பாதிப்பு

சிங்பாஸ் 1 மணி நேரம் பாதிப்பு

1 mins read
fdbaea7d-2d3a-439d-a3d0-9029d9c1f0a0
-
Google News Preferred Icon

சிங்கப்பூரின் சிங்பாஸ் சேவை நேற்று சுமார் 1 மணி நேரம் செயல்படாமல் போய்விட்டது.

இதனால் சில சிங்கப்பூரர்கள் அரசாங்க இணையச் சேவைகளைப் பெற முடியாமல் சங்கடப்பட்டனர்.

இந்தப் பிரச்சினை முற்பகல் சுமார் 11.30 மணிக்குத் தொடங்கி யது. ஒரு மணி நேரம் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிங்பாஸ் பராமரிப்பு காரணமாக தன்னுடைய மின்னிலக்கச் சேவைகள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கிடைக்காது என்று மத்திய சேம நிதிக் கழகத்தின் இணையத்தளம் தெரிவித்து இருந்தது.

அந்த அறிவிப்பு பிற்பகல் சுமார் 1 மணிக்கு அகற்றிக்கொள்ளப்பட்டது.

அந்த நேரத்தில் சிங்பாஸ் சேவைகள் செயல்படத் தொடங்கிவிட்டன.