பயணிகளுக்கு அறிவுரை

பயணிகளுக்கு அறிவுரை

1 mins read
00515b58-6946-4eca-a353-6fdf7e4ec36a
-
Google News Preferred Icon

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஆண்டிறுதி பள்ளி விடுமுறைக் காலத்தில் பயணம் செய்வோர் அதிகமாக இருப்பர்.

இதனால் உட்லண்ட்ஸ், துவாசில் கூட்டம் அதிகரிக்கும்.

குடிநுழைவு அனுமதி பெற கூடுதலாக நேரம் பிடிக்கும். ஆகையால், பயணிகள் உச்ச நேரங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஆலோசனை கூறி இருக்கிறது.

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கொவிட்-19க்கு முன்பு இருந்த அளவில் 80% போக்குவரத்து இப்போது திரும்பி இருக்கிறது என்பதை ஆணையம் சுட்டியது.

நவம்பர் 17 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.