சிங்கப்பூரில் புதிய பயிலகம்

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சமாளிக்க உதவவும் கடலோர உயிரினங்களைப் பாதுகாக்கவும் ஒரு புதிய பயிலகம் உருவாகும்.

அது, தென்கிழக்கு ஆசியா விலும் அதற்கு அப்பாலும் ஊசியிலைக் காடுகள், கடல்புற்கள் போன்ற உயிரினங்களைப் பாதுகாக்க ஆதரவு அளிக்கும்.

எகிப்தில் நடந்த ஐநாவின் COP27 பருவநிலை மாநாட்டைஒட்டி அமைக்கப்பட்ட சிங்கப்பூர் கூடத்தில் அமேசான், அனைத்துலகப் பழமைப் பாதுகாப்பு என்ற அமைப்பு இதனை அறிவித்தது.

தாங்கள் அனைத்துலக கடல் கரிமப் பயிலகம் ஒன்றை அமைக்கப் போவதாகவும் அப்பயிலகம் சிங்கப்பூரில் அமையும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

கடல் கரிமம் என்பது கடலோரப் பகுதிகளிலும் கடல்வாழ் உயிரின சுற்றுச்சூழலிலும் சேகரமாகும் கரியமில வாயுவாகும்.

இது உலகளாவிய பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண்பதில் முக்கியமான பங்கை ஆற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, அந்தப் பயிலகத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசினார்.

இத்தகைய கடல் கரிம செயல்திட்டங்கள் பல நாடுகளும் தங்களுடைய பருவநிலை இலக்குகளை நிறைவேற்ற ஆதரவு அளிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!