தீவு முழுவதும் உள்ள 23 இடங்களில் இருக்கும் சாக்கடைகள், புதன்கிழமை பிற்பகல் நிகழ்ந்த திடீர் வெள்ளத்தால், 90 விழுக்காடு நிரம்பியதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியுள்ளது.
பிற்பகல் 3.30 மணி முதல் 4.25 வரை, அப்பர் பாய லேபார் ரோடு அப்பர் சிராங்கூனில் உள்ள வான் தோ அவென்யூ, லோரோங் கம்பீர், ஜாலான் சீவியூ ஆகிய இடங்களில் உள்ள சாக்கடைகள் கிட்டத்தட்ட நிரம்பின.
அந்த இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு அவ்விடங்களைத் தவிர்க்கும்படி கழகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரின் பல இடங்களில் மாலை 5.30 வரை கடும் மழை பெய்யும் என்று கழகம் தெரிவித்தது.

