உலகளாவிய மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான 'ரெஸ்மெட்' அதன் ஆகப் பெரிய மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை நேற்று சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.
துவாசில் 270,000 சதுர அடி பரப்பளவில் இது அமைந்துள்ளது. இங்கு தூக்கப் பிரச்சினை உள்ளவர்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் 250 மில்லியனுக்கு அதிகமானோருக்குத் தேவைப்படும் மருந்துகளை இது தயாரிக்கும். சிங்கப்பூரில் ஏறத்தாழ 2.3 மில்லியன் பேர் 'ஸ்லீப் ஏப்னியா' எனும் தூக்கப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தூங்கும்போது பல முறை சுவாசம் தடைப்பட்டு, மீண்டும் தொடரும்.
திறப்புவிழாவில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் (படம்), சிங்கப்பூருக்கான ஆஸ்திரேலியத் தூதர் வில்லியம் ஹாட்க்மேன், சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் ஜோனதன் கப்லான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

